அமைதிக்கான நோபல் பரிசுக்கு இம்ரான் கான் பெயர் பரிந்துரை!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாக். மாஜி பிரதமர் இம்ரான் கான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற கட்சியின் நிறுவனராக உள்ளவர் இம்ரான் கான். பிரதமராக பதவி வகித்த போது ஊழல் புகாரில் சிக்கினார்.

அதன் எதிரொலியாக, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குற்றச்சாட்டுக்களுக்காக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தற்போது வரை சிறையில் உள்ளார். இதே வழக்கில் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில், உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு இம்ரான் கான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உலக கூட்டணி எனும் அமைப்பு இதற்கான பரிந்துரையை அளித்துள்ளது.

Previous Story

சில உள்ளூராட்சி மன்ற தேர்தல்:நாளை வரைநீதிமன்றம் உத்தரவு!

Next Story

காசாவில் 10 நாட்களில் 322 குழந்தைகள் பலி