அமைச்சர் பந்துலவை திட்டிய பெண்கள்!

கதிர்காமத்தில் உள்ள சதொச சிறப்பு அங்காடிக்கு இன்று காலை சென்ற வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவை,(Bandula Gunawardane) அங்கிருந்த பெண்கள் மிக மோசமாக திட்டியுள்ளதாக தெரியவருகிறது.

சிங்கள இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. “அரிசி இருக்கின்றதா என பார்க்க வந்துள்ளார். மக்களுக்கு உண்பதற்கும் இல்லை” எனக் கூறியே பெண்கள் திட்டியுள்ளனர்.

இதனால், அசௌகரியத்திற்கு உள்ளான அமைச்சர் பந்துல குணவர்தன, தற்போதைய சூழ்நிலையில், இருப்பவற்றை வழங்குவது குறித்து மகிழ்ச்சியடையுங்கள் என கூறியுள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரிசி உட்பட அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அத்துடன் பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவுவதாக கூறப்படுகிறது.

Previous Story

பண்டாரநாயக்க சமாதி அருகில் சுதந்திர நிகழ்வை நடத்தும் சந்திரிக்கா

Next Story

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி போராட்டம்