-நஜீப்-
நன்றி: 05.01.2025 ஞாயிறு தினக்குரல்
2025 ஆண்டு முற்பகுதியில் அமைச்சரவையில் மாற்றங்கள் நடக்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக நமக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. கதை உண்மையாக இருக்குமாக இருந்தால் இன்று விமர்சனங்களுக்கு இலக்காகி இருக்கின்ற பல மனக்குறைகள்-குறைபாடுகள் இதில் நீங்கும் என்று நாம் கருதுகின்றோம்.
சபாநாயகர் பதவியில் இருந்து வெளியேறிய அசோக்க ரங்வெலவுக்கும் இதில் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதே போன்று வடக்கு கிழக்கிலிருந்து ஒருவருக்கும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒருவருக்கும் இடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்க முடியும்.
வருகின்ற தேர்தல்களில் இந்தக் குறைபாடுகளை முன்வைத்து என்பிபி. யின் செல்வாக்கை சீர்குழைக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதனை என்பிபி. நன்றாக புரிந்து வைத்திருக்கின்றது என்பதும் தெரிகின்றது.
அதே போன்று பிரதி அமைச்சுக்களிலும் சில சிறுபான்மையினருக்கு மேலும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம் என்று நம்பப்படுகின்றது.