-நஜீப்-
நன்றி: 24.11.2024 ஞாயிறு தினக்குரல்
வரலாற்றில் முதல் முறையாக தற்போது 2024 ல் அமைந்திருக்கின்ற ஜேவிபி-என்பிபி. யின் அனுர ஆட்சியில் முஸ்லிம்களுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போனது நாட்டில் பேசு பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு விமர்சனங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதில் முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் அனுர விரோதிகளும் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னர் காலத்தில் கூட முஸ்லிம் அமைச்சர்கள் இருந்திருக்கின்றார்கள்.
1947 முதல் அமைச்சரவையில் முஸ்லிம்கள் இருந்திருக்கின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் அசாதாரண எண்ணிக்கையிலும் அது அமைந்திருந்தது. ஆனால் அவர்கள் செயல்பாடுகளில் சமூகத்துக்கு திருப்தி இல்லாத நிலைகளும் இருந்தன.
கோத்தாவின் காலத்தில் நீதி அமைச்சராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் ஒரு முஸ்லிம் இருந்த காலத்தில்தான் முஸ்லிம்கள் உடல்கள் நெருப்பில் போட்டுக் கொழுத்தப்பட்டது.
அதனை அவரால் தடுக்க முடியாமல் போனது. அது எப்படி இருந்தாலும் அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது தமது உரிமை பறிக்கப்பட்டதாகத்தான் முஸ்லிம்கள் அதனைப் பார்க்கின்றார்கள்.