நடைபெற்று முடிந்த அமெரிக்க இடைத்தேர்தலில் நபீலா சயீட் இலிநொய் மாநிலத்தின் பொதுச்சபைக்கு 52.3 % வாக்குகளைப்பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பல சவால்களுக்கு மத்தியில் நடைபெற்ற இத்தேர்தலில் அனுபவம் வாய்ந்த குடியரசு கட்சி உறுப்பினரை எதிர்த்து, இந்திய வம்சாவளியினை சேர்ந்த 23 வயதே நிரம்பிய இவர் மிகவும் இளவயது உறுப்பினராக தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.
அரசியல்துறை, வியாபாரத்துறை என இரு துறைகளிலும் முதுமானிப் பட்டப்படிப்பினைப் பெற்ற எமது சமூகத்தின் முதல் உறுப்பினரான இவரை வாழ்த்தி இவரின் சேவைகள் தொடர வாழ்த்துவோம்.