அமெரிக்கா வீழ்கின்றது சீனா பலம் பெறுகிறது! ரஷ;யாவும் இந்தியாவும் வரலாறு படைக்கின்றது

-யூசுப் என் யூனுஸ்-

இந்த உலகில் சில காட்சிகள் நாம் பார்த்த நிகழ்வுகள். இன்னும் சில நமது பாட்டன் பூட்டன் நமக்குச் சொன்ன கதைகள். இன்னும் பல சம்பவங்கள் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து நாம் தேடிப் பெற்றுக் கொண்டவை. இன்னும் சில சிதைவுகள் தொல்பொருள் மூலம் நாம் ஆய்வு செய்து பெற்றுக் கொண்டவை. நமது முன்னோர்கள் பண்ணிய சில படைப்புக்கள் இன்றுகூட நம்மால் வெற்றிகொள்ள முடியாத சாதனைகளாக வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றன. நைல், யூப்பிரதீசு-தைகிரீஸ், குவாங்கோ, இந்து நாகரிகங்கள் என்று அவை இன்றும் நாம் முன் சாட்சிகளாக மலைபோல் நிற்க்கின்றன. இது இன்றைக்கு 6000 வருடங்களுக்கு முற்பட்ட கதைகளாக இருக்கின்றன.

அடுத்து வரலாற்றில் ரோம, கிரேக்க சம்ராஜ்யங்களும், துருக்கியின் ஓட்டோமன் பேரசு, மொங்கோலிய படையெடுப்புகள் பற்றிய குறிப்புக்களும் குவிந்து போய் இருக்கின்றன. அதே போன்று மகா அலக்சாண்டர், நெப்போலியன் வரலாற்றுக் கதாபத்திரங்களின் வீர காவியங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். அதன் பின்னர் ஜேர்மன், இத்தாலி, ஜப்பான், துருக்கி ஆகிய நாடுகள் ஹிட்லரின் தலைமையில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்கள், அதனால் காவு கொள்ளப்பட்ட உயிர்கள் பற்றியும் நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். இந்தக் கதைகளைக் கண்ணால் பார்த்த சாட்சிகள் கூட இன்றும் சிறு எண்ணிக்கையில் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொண்ட இரு போர்கள் பற்றி உலகம் பேசுகின்றது. அடுத்து மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வந்து இந்த உலகம் அழிந்து போகுமோ என்ற அச்சம் இருந்து கொண்டே வருகின்றன.

இந்தப் போக்கில் ஆயுத பலம் பரீட்சிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் தொடர்ச்சியாக இருந்து கொண்டே வருகின்றன. ஈருலகப் போரில் நேச அணிகளாக இருந்த அமெரிக்காவும் ரஷ;யாவும் பிற்காலத்தில் பெரும் எதிரிகளாக உலகில் இரு முகாங்களுக்குத் தலைமைத்துவம் கொடுத்தன. அமெரிக்க தலைமையிலான அணி நேட்டோ என்றும் ரஷ;யா தலைமையிலான அணி வோர்சோ என்றும் ஒரு காலத்தில் இருந்தன.

அக்காலப் பகுதி பனிப்போர் என்று அழைக்கப்பட்டது. பின்னர் ரஸ்யாவுக்குத் தலைவராக வந்த மிக்கயில் கோர்பச்சேவ் என்பவர் சோஸலிச ஒண்றியமாக இருந்த ரஷ;யாவை அமெரிக்காவின் கைக்கூலி என்ற நிலைக்கு கொண்டு வந்து ரஷ;யா தேசியவாதிகளுக்கும் தேசத்துக்கு பெரும் தலை குனிவைக் கொடுத்ததுடன். நாட்டில் பல தனி நாடுகள் தோன்றவும் ரஷ;யா சின்னாபின்னமாகவும் காரணமாக இருந்தார்.

இந்த தசாப்தத்தில் அமெரிக்க உலக அரங்கில் தனிக்குதிரை என்று காரியம் பார்த்து அட்டகாசங்களைப் பண்ணிக் கொண்டிருந்தது. போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாடுகளின் செல்வங்களை சூரையாடுகின்ற காரியத்தையும் இந்த காலத்தில் அமெரிக்கா மேற்கொண்டு வந்தது. ஈராக் மீதான படையெடுப்பின் பின்னணியும் இதுதான். இப்படி உலகில் பல நாடுகளை அச்சுறுத்தியும் கொள்ளையடித்தும் தனது கஜானாவை சரி செய்ய அமெரிக்க நிருவாகங்கள் முயன்று வந்திருக்கின்றன.

ரஷ;யா துண்டாடப்பட்டு நாடு பொருளாதார ரீதியில் பெரும் இக்கட்டான நிலையில் இருந்த நேரத்தில் ரஷ;யாவுக்கு விலாடிமீர் புட்டின் என்பவர் அதிபராகிறார். இவர் ஒரு விளையாட்டு வீரரும் சிறப்பான உடற் கட்டமைப்புடையவருமாவார். ரஷ;யாவுக்கு ஒருவர் இருமுறை ஜனாதிபதியாக இருக்க முடியும். அதற்கு மேல் தொடர்ச்சியாக ஒருவர் ஜனாதிபதியாக வர முடியாது என்ற விதியின்படி. அவர் தனது இரு தவணைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்து ரஷ;யாவை உலகரங்கில் அது பட்ட அவமானங்களில் இருந்து விடுதலையும் பெற்றுக் கொடுத்ததுடன் நாட்டை ஒரு கௌரவமான இடத்துக்கு கொண்டு வந்தார்.

மக்கள் ரஸ்யாவுக்கு புட்டின் வேண்டும் என்று நின்றாலும் யாப்பு அதற்கு இடம் கொடுக்க வில்லை. அதற்காக நாம் நாட்டைப்போல் புட்டின் யாப்பை மாற்றி தவணையை கூட்டிக் கொள்ளவுமில்லை. தனது நண்பரும் அப்போதய பிரதமருமான டிமித்திரி மெத்வெடெவ் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி தான் அதிகாரம் குறைந்த பிரதமர் பதவியில் அமர்ந்து ஆட்சியை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார் புட்டின். அதன் பின்னர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் நின்று மிகப் பெரும்பான்மை பலத்துடன் இப்போதுவரை பதவியில் இருக்கின்றார். நாட்டு மக்களும் அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் இருக்க சம்மதம் கொடுத்துள்ளனர்.

ரஷ;யாவுக்கு புட்டின் நம்பிக்கை கொடுக்கின்ற காலத்தில் அமெரிக்காவில் மிதமிஞ்சிய பணச் செலவு, பொருளாதாரா நெருக்கடிகள் அந்த நாட்டை நெருக்கடிக்கு இலக்காக்கி இருந்தது. இந்த நேரத்தில் மாற்றம் என்று கருப்பொருளில் தேர்தலுக்கு வந்த கென்யா வம்சாவளி கறுப்பின ஹூசைன் பாரக் ஓபாமா என்ற மனிதன் அனைத்து வரலாற்று சம்பிரதாயங்களையும் தகர்த்துக் கொண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரு தவணை பதவி வகித்ததுடன் நாட்டில் அதுவரை இருந்து பெரும் நெருக்கடிகளில் இருந்தும் நாட்டை மீட்டெடுத்தார். உலக நாடுகளுடன் தன்னால் முடியுமான மட்டும் நல்லுறவை வளர்க்க ஒபாமா முயன்றிருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் அவர் காலத்தில் உலக கொந்தளிப்பு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது என்று கூற முடியும்.

இந்தப் பின்னணியில் சீனா எந்தவெரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையீடு செய்யாது தனது பொருளாதாரத்தை அசுர வேகத்தில் வளர்த்துக் கொண்டு சென்றதுடன் இராணுவ தொழிநுட்ப ரீதியில் தன்னை அது வளர்த்துக் கொண்டு விட்டது. இதற்கிடையில் வடகொரிய, ஈரான், துருக்கி, என்பனவும் இராணுவ ரீதியில் தம்மை வளர்த்து அமெரிக்காவை அச்சுருத்திக் கொண்டு நின்றன. இந்த நிலையில் உலகின் போர் உத்திகளிலும் வடிவங்களிலும் கனிசமான மாற்றங்கள் ஏற்பட்டன. அமெரிக்க கோபுரங்களை ஒரு ஆயுதக்குழு சில நெடிகளில் சுக்குநூறாக்கி அமெரிக்காவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன.

நாடுகளை விட உலகம் பூராவிலும் சிறு குழுக்கள் வலிமை பெற்றன. இந்தக் குழுக்களை நெறிப்படுத்துகின்ற வேலைகளில் அமெரிக்ககூட திரைமறைவில் பல இடங்களில் காரியம் பார்த்திருக்கின்றன. அல்ஹைடா, ஐஎஸ்ஐஎஸ் செயல்பாடுகளில் கூட அமரிக்காவின் நேரடியானதும் மறைமுகமானதுமான பங்களிப்புகள் இருந்து வந்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இன்று உலக சமநிலையில் பெரிய மாற்றங்கள் நிகழ்து கொண்டிருக்கின்றன. சீனா பொருளாதார ரீதியில் அமெரிக்காவை முந்துகின்ற ஒரு நிலை கைக் கெட்டிய தூரத்தில் இருக்கின்றது.

ட்ரம்ப் வருகையுடன் அமெரிக்காவுக்கு பெரும் சேதம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அமெரிக்க வரலாற்றில் மிகவும் இக்கட்டான நிலையில் இன்று நாடு இருக்கின்றது. பொருளாதார நெருக்கடி உச்ச கட்டத்தில் இருக்கின்றது. சின்னச் சின்ன நாடுகள் கூட அமெரிக்காவை பயமுறுத்துகின்ற நிலை. மறுபுறத்தில் அதிபர் ட்ரம்பின் கோமாளித்தன மற்றும் முட்டால்தனமான செயல்பாடுகளினால் ஒட்டுமொத்த அமெரிக்கர்களுக்கும் தலைகுனிவு உலகரங்கில் ஏற்ப்பட்டிருக்கின்றன. மன நலம் பதிக்கப்பட்டவர் போல் அமெரிக்க அதிபர் தற்போது நடந்து கொண்டு வருகின்றார் கொரோனா விவகாரம் மற்றும் கறுப்பின ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலை ஆகியவற்றில் அவரது செயல்பாடுகளை அவரது படைத் தளபதிகளும் நிருவாகிகளும் விமர்சனம் பண்ணி வருகின்றார்கள். பேசத் தெரியாவிட்டால்வாயை மூடு என்று கூட ஒரு இராணுவ அதிகாரி ட்ரம்புக்கு கூறி இருந்தார்.

இது பற்றி நாம் கடந்த வாரமும் சொல்லி இருந்தோம். உலகம் மட்டுமல்ல அமெரிக்கர்களே குறிப்பாக அவருடன் இருந்தவர்களே அவரை தற்போது கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து வருகின்றார்கள். அவர் நியமித்த மிக உயர்மட்ட பதவிகளில் இருந்தவர்களே இந்த மனிதன் ஒரு பைத்தியம் போல் செயலாற்றுகின்றான் அவனுடன் வேலை செய்வதைவிட தொழிலை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிப்போய் இருக்கின்றார்கள். பதவியில் இருப்பவர்களும் நீ சொல்வதை எங்களால் செய்ய முடியாது நாம் சொய்வதை நீ பார்த்தக் கொண்டு இரும் என்று செயலாற்றி வருகின்றார்கள்.

இன்று தனது வரவு செலவு விவகாரங்களை சரி செய்ய அமெரிக்கா வங்கிகளிடம் கடன் வாங்கி வருகின்றது. இதனால் வங்கிகள் நிதி நிறுவனங்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைகள் குறைவடைந்து வருகின்றன. அமெரிக்காவின் பணக் கையிருப்பு கீழ்மட்டத்தில் இருக்கின்றது. நாடுகளை இதன் பின்னரும் தொடர்ந்து சுரண்ட முடியாத நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் கூட்டணிகள் மற்றும் நேச நாடுகள் கூட நாம் தொடர்ந்து அமெரிக்கா பின்னால் போவது பற்றி அச்சமடைந்து வருகின்றன. கொரோனா கூட அமெரிக்காவை கொடூரமாகத் தாக்கி அச்சுறுத்தி வருகின்றது. மரத்தால் விழுந்தவனை மாடுமோதிய கதைபோல்தான் இது இருக்கின்றது.

டொலருக்கு எதிராக ரஷ;யா, சீனா மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகள் கூட அச்சுறுத்தல்களைக் கொடுத்துக் கொண்டு வருகின்றன. யூரோ நாணயத்தை முதன்மைப்படுத்துவதற்கு அவை கடுமையாக முயற்சிக்கின்றன. அமெரிக்க பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் சரிவடைகின்ற போது சீனாவின் பட்டுப் பாதை தென் அமெரிக்கா வரை அதாவது அமெரிக்காவின் காலடிக்கே போய் நிற்க்கின்றது. தென் அமெரிக்காவில் கூட சீனாவுக்கு விசுவாசமான கூட்டாளிகள் உருவாகி வருகின்றார்கள்.

ஐரோப்பிய நாடுகள் பல இன்று அமெரிக்காவின் பேச்சை கேட்கின்ற நிலையில் இல்லை பல விவகாரங்களில் ஜேர்மன் அமெரிக்காவின் முகத்தில் அறைவது போல் காரியம் பார்த்து வருகின்றது. பிரான்ஸ், இத்தாலி என்பன கூட சீனாவை நேசமாக நோக்கி வருகின்றன. ஈரான் விவகாரத்தில் கூட ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு மாற்றமான தீர்மானத்தை எடுத்திருந்தது தெரிந்ததே.

இந்த பின்னடைவுகளுக்கு மத்தியிலும் கடைசித் துரும்பை வீசி ஆட்டத்தில் வெற்றி பெற முயற்ச்சிப்பது போல் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வியூகங்களை அமைக்க முனைகின்றது. இப்போது அமெரிக்காவுக்கு இது விடயத்தில் ஒத்துழைக்க அவுஸ்திரேலிய மட்டுமே முன்வந்திருக்கின்றது போல் தெரிகின்றது. ஆனால் கேந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் இது எந்தளவுக்கு வாய்ப்பாக இருக்கும் என்று தெரியவில்லை.

தென் சீனப் பிராந்தியத்தில் அமெரிக்க, சீனாவுக்கு எதிரான ஒரு அணியை உருவாக்க முனைகின்றது இந்த அணி பூதம்போல் வழுவாக நிற்க்கின்ற சீனாவுக்கு மத்தியில் எந்தளவு சாத்தியம் என்பது தெரியவில்லை சீனாவுக்கு எதிரான அணியில் தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் கூட்டுச் சேர்த்திருப்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்வரை சீனாவுக்கு எதிரான இந்த நாடகத்தை ட்ரம்ப் நிருவாகத்தால் முன்னெடுக்க முடியும். ஆனால் அதற்குப் பின்னர் இது என்ன ஆகும் என்று தெரியவில்லை.

தற்போது அமெரிக்காவின் நடந்த கறுப்பினத்தவர் படுகொலை அமெரிக்க சிவில் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடந்து கொண்ட முறை கறுப்பர்களால் மட்டுமல்ல வெள்ளை இனத்தவர்களினாலும், அனைத்து மனித குலத்தாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் இதே ட்ரம்ப் வெற்றி பெறுகின்றார் என்றால் உலக அமைதிக்கும் அமெரிக்க சிவிவில் சமூகத்திலும் பாரிய வெடிப்புகளுக்கும் பிளவுகளுக்கும் நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே ட்ரம்பின் பதவிக் காலம் அமெரிக்காவுக்கு ஒரு சோதனைக் காலமாகவே இருக்கின்றது.

இதற்கிடையில் ரஷ;யா, இந்தியா, போன்ற பலமான நாடுகளை நெருங்க ட்ரம்ப் நிருவாகம் பல்வேறு முயற்ச்சிகளை சிறு பிள்ளைத்தனமாக மேற்கொண்டாலும் அவை ட்ரம்பின் கதைகளை நம்பி ஒரு போதும் சீனாவுக்கு எதிரான கூட்டில் சேரவோ அது பற்றி கற்பனை செய்யவே அரவே வாய்ப்புக் கிடையாது. சீனாவுக்கும் ரஷ;யாவுக்கும் இப்போது நெருக்கமான உறவுகள் வழுவாக இருந்து வருகின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வரலாற்று ரீதியில் நெடுநாள் பகைமை இருந்தாலும் அது சீனாவுக்கு எதிரான அமெரிக்கா முகமில் போய் நிற்பதற்கு வாய்ப்பில்லை.

அண்மையில் ஏற்ப்பட்ட எல்லை நெருக்கடியின் போதும் நான் மத்தியஸ்தம் செய்து வைக்கத் தயாராக இருக்கின்றேன் என்று டொனல்ட் ட்ரம்ப் பாய்ந்து கொடுத்த போது இரு நாடுகளுமே இந்த விவகாரங்களை நாம் பார்த்துக் கொள்கின்றோம் என்று அவை கூறி விட்டன. இதனால் ட்ரம்ப் இந்த விவகாரத்திலும் மூக்குடைபட்டார். இந்தியா பிராந்தியத்தில் மட்டுமல்ல சீனாவுக்கு அடுத்த படியாக உலகாதிக்கத்தில் செல்வாக்கான நாடாக வளர்ந்து வரும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்ற போது ட்ரம்பின் முட்டால்தனமான யோசனைகளுக்குள் சிக்கிக் கொள்ளாது. ஆனால் சில இந்திய ஊடகங்கள் இது விடயத்தில் வெளியிடுகின்ற செய்திகள் கருத்துக்கள் மிகவும் கீழ்தரமானதும் முட்டால் தனமானதுமாக அமைந்திருக்கின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியத் தலைவர்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் அறிவுபூர்வமாக சிந்திக்கின்றார்கள் என்பதுதான் எமது கருத்து.

துருக்கி அமெரிக்க நேச நாடாக இருந்தாலும் அதுவும் இன்று அமெரிக்க நிருவாகத்தின் கட்டுப்பட்டிலிருந்து விடுதலை பெற்று நெடுநாளாகின்றன. துருக்கிய அதிபர் ஏர்டோகன் திட்டப் படி அவர்கள் தமது வல்லமையை உலகிற்கு காட்சிப்படுத்துகின்ற கட்டத்துக்குள் பிரவேசித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று உலகில் சக்தி வாய்ந்த ஆயுதமாகக் கருதப்படுகின்ற அதி நவீன ஆளில்லா சண்டை விமானங்ளை அவர்கள் தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தும் வருகின்றார்கள். இது மிகவும் தரம்வாய்தது. இதனை இஸ்ரேல் அமெரிக்க மட்டுமல்ல படைத்துறை ஆய்வாலர்களும் பகிரங்கமாக தற்போது அறிவிதிருக்கின்றார்கள். உலக ஆயுத ஏற்றுமதியில் துருக்கி முக்கியமான ஒரு இடத்தை தற்போது பிடித்திருக்கின்றது.

அதே போன்று ஈரானும் தனது படைத்துறை தேவைகளில் கனிசமானதை சொந்தமாக உற்பத்தி செய்து கொள்கின்றது. அதுவும் தற்போது ஆயுத ஏற்றுமதியில் கால் பதித்திருக்கின்றது. இது அமெரிக்காவுக்கு ஆரோக்கியமான செய்திகள் அல்ல. வட கொரியாவும் சீனா ரஷ;யா ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பேனி வருகின்றன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளும் எதிர்காலத்தில் பலயீனமடைக்கின்ற அமெரிக்காவுக்கு பின்னால் அணி சேர்வதற்கு வாய்புக்கிடையாது.

அமெரிக்க பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில் சீனா பெரும் தொகையான நிதிவளத்தை கைவசம் வைத்திருக்கின்றது. ஹெங்கொங் விவகாரத்தில் அமெரிக்க நடந்து கொள்ளும் முறைக்கு எதிராக அங்குள்ள மிகப் பெரிய கோடிஸ்வரர்கள் அனைவரும் சீனாவுக்கு விசுவாசம் தெரிவித்திருக்கின்றார்கள். இது அமெரிக்க சற்றும் எதிர்பார்க்காத ஒரு விவகாரம்.சர்வதேச ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் செல்வாக்குப் பெற்றிருந்த அணிசேரா இயக்கம் மற்றும் சார்க் போன்ற பிராந்திய இயக்கங்கங்கள் அனைத்தும் தற்போது செல்வாக்கிழந்து நிற்க்கின்றன எனவே உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் பிடியிலிருந்து விடுபடும் நிலையில் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

தேசிய அரசியல்! ஜூனியர் தொண்டா நமது அவதானம்!

Next Story

ஆளும் தரப்புக்கு மூன்றில் இரண்டு சஜித் நம்பிக்கை எல்லாமே கனவு!