அமெரிக்காவை அலறவிட்ட கம்யூனிஸ்டுகள்

பிரம்மாண்ட பேரணி..! பெரிய ஷாக்!! அதிபர் தேர்தல் வேற நெருங்குது!!!

அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் அங்கே மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடந்துள்ளது. பிலடெல்பியாவில் மிகப் பெரியளவில் நடந்த இந்த பேரணி அங்குப் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக எலான் மஸ்க் கூட இந்த பேரணி ஆச்சரியம் அளிப்பதாகப் பதிவிட்டுள்ளார். சின்ன நகரம்தான்.. ஆனால் பாருங்க இப்போ அடிச்சு தூக்கி முன்னேறுது.. அசர வைத்த வளர்ச்சி.. இதை பாருங்க அமெரிக்கா முழுக்க முழுக்க ஒரு முதலாளித்துவ நாடு. அங்கே யாராவது கம்யூனிஸ்ட் என்றாலே வினோதமாகப் பார்ப்பார்கள். அவ்வளவு ஏன் யூனியன் என்ற வார்த்தை கூட கேட்டால் அங்குள்ள பெரு நிறுவனங்கள் அலறும்.

கடந்த முறை அதிபர் தேர்தலில் ஜோ பைடனை கம்யூனிஸ்ட் என்று விமர்சித்த டிரம்ப், இதனால் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். தான் கம்யூனிஸ்ட் இல்லை கேபிடலிஸ்ட் என அப்போது பைடன் விளக்கமளிக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. அமெரிக்கா-

கம்யூனிசம்

As Communists march on US streets, Elon Musk has an exclamation - India Today

அந்தளவுக்குக் கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிச கொள்கைகள் மீது அமெரிக்க மக்களுக்கு ஒருவித அலர்ஜி இருக்கும். கம்யூனிசம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.. அது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதே அங்குள்ள முதலாளித்துவவாதிகளின் கருத்தாக இருக்கிறது. இதன் காரணமாகவே கம்யூனிசத்தின் மீது அமெரிக்க மக்களுக்கு அந்தளவுக்கு வெறுப்பு இருக்கிறது.

இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் அமெரிக்காவில் நேற்று கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் பங்கேற்ற மிகப் பெரிய பேரணி நடந்துள்ளது. கிழக்கு அமெரிக்க நகரமான பிலடெல்பியாவில் நடந்த இந்த பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி, “அமெரிக்காவின் கம்யூனிஸ்ட் தலைமுறைக்கு வணக்கம் சொல்லுங்கள்” என்று பதிவிட்டுள்ளது.

உலக வல்லரசுக்கு இப்படியொரு சிக்கலா.. அமெரிக்காவில் 164 வருடமாக 2 கட்சிகள் மட்டும் இருப்பது ஏன் எலான் மஸ்க்: கம்யூனிஸ்ட் என்ற சொல்லைக் கேட்டாலே அலறி ஓடும் அமெரிக்காவில் இவ்வளவு பெரிய பேரணி நடந்துள்ளது பலருக்கும் வியப்பையே ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இது ஆச்சரியத்தைத் தருகிறது என்பது போல ட்வீட் செய்துள்ளார். அதற்கு “கோடீஸ்வரர்கள் ஒட்டுண்ணிகள் என்று அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி பதிலளித்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி

ஆர்சிஏ எனப்படும் அமெரிக்காவின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பிப். மாதம் தொடங்கப்பட்டது. அப்போது நாடு முழுக்க இருந்து பல நூறு பேர் ஒன்று கூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிலவும் வர்க்க பாகுபாட்டிற்கு எதிராக அமெரிக்காவின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான புரட்சிகர கம்யூனிஸ்ட்டுகள் புரட்சிக்காகப் போராடவும் தயாராக உள்ளனர் என்பதையே இது காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அமெரிக்க ஊடகங்கள் யாரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்த செய்திகளை வெளியிடுவதில்லை.

அதேநேரம் அமெரிக்காவில் கம்யூனிசம் முழுக்க முழுக்க அந்நியமானது எனச் சொல்ல முடியாது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தொழிலாளர் இயக்கங்கள் மற்றும் சிவில் உரிமை இயக்கங்களின் செயல்பாடு காரணமாக அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி ஓரளவுக்கு நல்ல எழுச்சியை அமெரிக்கா கண்டது. அங்கு உழைக்கும் வர்க்கத்தினருக்குப் பல உரிமைகள் கிடைத்தது அப்போது தான். ஆனால், காலப்போக்கில் அந்த கட்சி அப்படியே காணாமல் போனது.

Previous Story

மொட்டு வேட்பாளர் விவகாரத்தில் மிகப் பெரிய நாடகம்?ரணிலுக்கு 115+ நடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு-நிமல் லன்சா

Next Story

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவிப்பு!