அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் கோரிக்கை!

உக்ரைனுக்கு மேலும் போர் விமானங்களை அனுப்புமாறு அமெரிக்காவை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கேட்டுக் கொண்டார்.

11வது நாளில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், அதிபர் செலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைனுக்கு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குமாறும், ரஷ்யா மீது தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறும் ஜோ பைடனை செலன்ஸ்கி கேட்டுக் கொண்டார்.

இந்த வாரம் இரண்டாவது முறையாக செலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , உக்ரைனுக்கு தேவையான பாதுகாப்பு, மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

உக்ரைனுக்கு மேலும் போர் விமானங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட செலன்ஸ்கி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

Previous Story

தீவிரவாதி ஹக்கானி ஆப். அமைச்சரானார்

Next Story

உக்ரைனின் கோரிக்கை நேட்டோ நிராகரிப்பு!