அப்பச்சிதான் துட்டகைமுனு!

-நஜீப்-

நன்றி 24.08.2025 ஞாயிறு தினக்குரல்

Mahinda Rajapaksa Questions Credibility of Former Good Governance Allies

தூரத் தொலைவுப் பிரதேங்களில் இருந்து முன்னாள் ஜனாதிபதி அப்பச்சியைப் பார்க்க சிலர் வண்டியேறி கொழும்பு வந்திருந்தனர். அந்த நிகழ்வுகள் இப்போது வைரலாகி வருகின்றது. அங்கு சென்றவர்கள் அப்பச்சிக்கு விருப்பமான சில உணவுப் பொருட்களையும் கூடவே எடுத்துச் சொன்றிருந்தனர்.

சர்ச்சைக்குரிய திஸ்ஸ குட்டியாரச்சி அங்கு பேசும் போது நீங்கள்தான் என்றைக்கும் எங்கள் ஜனாதிபதி. 2029ல் நிச்சயமாக உங்கள் மகன் நாமல் சேரை நாம் இந்த நாட்டில் ஜனாதிபதியாக நியமித்துவிட்டுத்தான் ஓய்வோம் என்று  சொன்னார். அத்தோடு யார்தான் நாட்டில் ஜனாதிபதியானாலும் நீங்கள்தான் எங்களது துட்டகைமுனு என்றும் சொன்னது குட்டி.

இது பற்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் அப்படி உங்களைப்பார்க்க யாரும் வரவில்லையா என்று கேட்ட போது, ஐயோ அப்படி எவரும் என்னைத் தேடி வந்து விடாதீர்கள் என மைத்திரி வேண்டுகோள் விடுத்தார்.

Previous Story

මෙන්න විපක්ෂයේ සෙට් එක එකතු වෙලා පැලවත්තේ සෙට් එකට බඩ යනවලු!

Next Story

ரணில் கைது: NPP சட்டத்தரணிகள் விளக்கம்!