அப்துல் கதிர்க் கான்

யூசுப் என் யூனுஸ்

பிறப்பு:01.04.1936
இறப்பு:10.10.2021

‘முட்டாள் தினத்தில் பிறந்த மிகப் பெரிய புத்திசாலி’
‘இந்திய மத்திய பிரதேச-போப்பல் கானின் பிறப்பகம்’

இந்திய துணைக் கண்டத்தில் இருந்து 14.08.1947ம் திகதி பாகிஸ்தான் என்ற நாடு பிரிந்து சென்றது. இதற்கு மதம் பிரதான காரணியாக இருந்து வந்திருக்கின்றது. 15.08.1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்கு இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு முன்னர் ஆங்கிலேயர் இந்தியாவை துண்டு போட்டு நாம் காணிகளை பங்கு போட்டுப் பிரிக்கின்ற பாணியில்தான் இது நடந்தது. முஸ்லிம்களுக்கு தனியாக பாகிஸ்தான் என்ற நாட்டைப் வென்றெடுப்பதில் முஹம்மத் அலி ஜின்னா பங்கு மகத்தானதாக இருந்து வந்திருக்கின்றது.

இந்த பாகிஸ்தான் என்ற நாடு பிரிக்கப்படும் போது அது மேற்குப் பாகிஸ்தான் கிழக்குப் பாகிஸ்தான் என்ற நிலத் தொடர்பற்ற இரு பிரதேசங்கள் இதில் சேர்க்கப்பட்டது. இதற்கு நாம் முன்சொன்ன மதமே காரணமாக இருந்தது. ஆனால் மேற்குப் பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கும், கிழக்குப் பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கும் மொழி மற்றும் காலச்சார ரீதியில் பாரிய வித்தியாசங்கள் இருந்தன. எனவே 16.03.1971ம் திகதி சாந்தி பாஹிணி என்ற போரட்டத்தின் ஊடாக ஷேக் முஜீபுர் ரஹ்மான் (வங்கச் சிங்கம்) இந்தியாவின் துனையுடன் கிழக்குப் பாகிஸ்தனை பங்காளதேஷ் என்ற பெயரில் தனி நாடாக வென்றெடுத்தார். அவர் மகள் ஹசீனா தான் இன்று அந்த நாட்டுத் தலைவி.

இந்த பின்னணியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் நெடுங்காலப் பகை ஒன்று இருந்து வந்தது அனைவரும் அறிந்த கதை. காஷ்மீர் என்ற பிரதேச உரிமைகள் என்ற மிகப் பெரிய ஒரு சிக்கலும் அங்கு நெடு நாளாக இருக்கின்றது. இதனால் இரு நாடுகளும் பல முறை எல்லையில் மோதிக் கொண்டு வருகின்றது. நாடுகளின் வல்லமைகளை உலகிற்குக் காட்சிப்படுத்துகின்ற முக்கியமான ஆயுதமாக அணு குண்டுகள் இன்று வரை இருக்கின்றது. 1974ல் இந்திய தனது முதலாவது அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்தது. இது பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தையும் அச்சத்தையும் உண்டு பண்ணி விட்டது.

இப்போது அப்துல் கதிர் கான் கதைக்கு வருவோம். 1936.04.01 இந்திய மத்திய பிரதேசத்திலுள்ள போப்பல் என்பது கான் பிறந்த இடம். பஸ்தூன் இனப் பரம்பரையைச் சேர்ந்தவர். தந்தை அப்துல் கபூர். இவர் ஒரு கல்வியியலாளர். பாகிஸ்தான் பிளவு பட்ட பின்னர் அப்துல் கபூர் குடும்பம் பாகிஸ்தானில் குடியேறியது. கராச்சி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற கான் மேற்கு ஐரேப்பிய நாடுகளில் தொழிநுட்பத் துறைகளில் உயர் படிப்புக்களை மேற்கொண்டார். கான் அங்கு டாக்டர் பட்டமும் வாங்கிக் கொண்டார். தான் தென் ஆபிரிக்கா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் வேலை பார்த்த போது அணு விவகாரங்களில் அதிக ஆர்வமாக இருந்து வந்திருக்கின்றார். அப்போதய பாக். பிரதமராக இருந்த சுல்பிக்கார் அலி பூட்டோவுக்கும் இவருக்கும் நெருக்கமான உறவுகள் இருந்து வந்திருக்கின்றது.

கானின் திறமையை அறிந்திருந்த பூட்டோ எப்படியாவது பாகிஸ்தானுக்கு அணு வல்லமையை பெற்றுத்தர வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொன்டே இருந்தார். அந்த நாட்களில் நாட்டுக்கு வந்த போதெல்லாம் அநேகமாக பிரதமர் பூட்டோவுடனே கான் காலத்தை செலவு செய்து வந்தார். அதற்கான காரணம் பிற்காலத்தில்தான் உலகிற்குத் தெரிய வந்தது.

மேற்கு நாடுகளில் அணு ஆய்வு மையங்களில் கான் பணியாற்றுகின்ற போது அணுத் தொடர்பான கோவைகளைக் அங்கிருந்து கடத்தி இருக்கின்றார் என்று ஒரு கதையும் இருக்கின்றது. மேலும் இவர் தனது கல்வித் தரத்துக்கும் குறைந்த மட்டத்திலான வேலைகளை அணு ஆய்வு மையங்களில் மேற் கொண்டிருந்தார் என்றும் தெரிய வந்திருக்கின்றது. சில இடங்களில் துப்பறவுத் தொழில் கூட அவர் செய்திருப்பதாகவும் தகவல்கள் சொல்கின்றது.

அவ்வாறன இடங்களில் இவர் பணியாற்றிக் கொண்டு தகவல்களை அங்கிருந்தும் கடத்தி இருக்கின்றார். எனவே பாகிஸ்தான் களவாடப்பட்ட அணு குண்டையே வைத்திருக்கின்றது என்று கதைகளும் சொல்லப்படுகின்றது. இது தனது உயிரை அவர் பணயம் வைத்து செய்த பணியாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கதைகள் உண்மையானால் இது மொசாட் பாணியிலான ஒரு வேலைபோல் அமைந்திருக்க வேண்டும். ஏப்ரல் முதலாம் திகதி பிறந்ததால் அப்துல் கதிர் கானுக்கு உலகில் முட்டாள்; தினத்தில் பிறந்த மிகப் பெரிய புத்திசாலி என்ற ஒரு பெயரும் இருக்கின்றது.

1976 இவர் பகிஸ்தானியில் ஆணு ஆய்வு மையங்களை இவர் நிறுவினார். எப்படியோ 1998ல் அதாவது இந்தியா அணு குண்டை உற்பத்தி செய்த கால் நூற்றாண்டுக்குப் பின்னர் கான் பாகிஸ்தானுக்கு அணுகுண்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது சுல்பிக்கார் அலி பூட்டோ மரணித்திருந்தார். வட கொரிய மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு அணு இரகசியங்களை விற்றார் என்றும் இவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. தான் அரசின் அணுமதியுடன்தான் இவற்றைச் செய்ததாக அவர் ஒத்துக் கொண்டர். இதனால் கோபமடைந்த அரசு அவரை சிறையில் தள்ளியது. என்றாலும் வீட்டுக் காவல் போல்தான் அவருக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

2009ல் கானை அரசு விடுதலை செய்தது. அமெரிக்கா கானுக்கு உயிரபத்து இருப்பதை அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருந்தது. இதனால் அவருக்கு அரசு உச்ச பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தது. தனது 85 வயதில் நுரையீரல் தொடர்பான நோயல் அவர் கடந்த பத்தாம் திகதி இயற்கை எய்தினார். தான் மரணிக்கின்ற போது ஒரு பாக். பிரசை பெறக் கூடிய அனைத்து விருதுகளையும் அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மரணத்துக்குப் பின்னர் இஸ்ரேல் ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்லி இருந்தது. ஹாரிட்ஜ் என்ற நாளிதழ் கதிர் கான் விடயத்தில் இஸ்ரோல் ஏமாந்து விட்டது. அவரை நாம் தொடர்ச்சியாக அவதானித்துக் கொண்டு வந்தோம். அவர் மத்திய கிழக்கு ஈரான் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்யும் போது அது சாதாரண பயணங்கள் என்று நமது உளவுத்துறை எண்ணிக் கொண்டிருந்தது. இல்லாவிட்டால் அவரை நாம் எப்போதோ தீர்த்துக் கட்டி இருக்க முடியும். இன்று ஈhரன் ஆணு வல்லமை உள்ள நாடாக மறி இருக்கின்றது. இதன் பின்னணியில் இருந்தது கான் தான்.

நாம் இந்த உண்மைகளைக் கண்டறிகின்ற போது கதீர் கான் என்றோ தனது எல்லையைக் கடந்திருந்தார் என்று இஸ்ரேல் செய்தி வெளியிட்டிருக்கின்றது. அப்படிப் பார்த்தாலும் முட்டாள் தினத்தில் பிறந்த கான் பெரும் கில்லாடியாகத்தான் மொசாட்டையும் ஏமாற்றி இருக்கின்றார் என்று எடுத்துக் கொள்ள முடியும்.

Previous Story

பிராந்திய நலன் காக்க பகிரங்க அழைப்பு

Next Story

தேசிய மட்டக் கட்டுரைப் போட்டி-2021