-நஜீப்-
நன்றி: 05.01.2025 ஞாயிறு தினக்குரல்
கிளீன் SRI LANKA திட்டத்தை கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி அனுர துவக்கி வைத்தார். ஜனாதிபதி செயலக முற்றலில் நடந்த எளிமையான ஒரு வைபவத்தில் பேசிய ஜனாதிபதி இந்த மாற்றம் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் எதிர்பார்க்கப்படுவதை சுட்டிக்காட்டியதுடன், இந்த மாற்றங்கள் முதலில் மனித இதயங்களில் ஆரம்பமாக வேண்டும். அதனைத்தான் நாம் இங்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த ஆட்சியாளர்களுக்கு இரண்டு முகம் இருப்பது அனைவருக்கும் தெரியும். புத்த பிரானைப் போல அனுர அரசால் செயலாற்ற முடியும். அதே போன்று ஒரு வில்லன் போலவும் அவர் அரசாங்கத்தால் காரியம் பார்க்க முடியும்.
ஆனால் சமகாலத்தில் இவர்கள் நாம் முதலில் சொன்னது போல மென்மையாகத்தான் காரியம் பார்க்க விரும்புகின்றார்கள். கொள்கைக்காக தலைவர் விஜேவீர மற்றும் பல்லயிரக் கணக்கான சகாக்களைப் பலி கொடுத்த ஜேவிபி.தான் இந்த அரசின் ஆணி வேர்.
தனிப்பட்ட ரீதியில் இன்று அரசில் இருக்கின்ற பலர் தமது கொள்கைக்காக நிறையவே தியாகங்களை செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.