அனுர – சஜித் விவாதம்!

-நஜீப்-

அனுர தரப்பிற்கு தமது பொருளாதாரக் கொள்கைகளை இரு தரப்பினரும் பகிரங்கமாக தொலைக் காட்சியில் விவாதிப்போம் என்று சஜித் அணியினர் அழைப்பு விடுத்தாலும் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நளின் பண்டார என்ற சஜித் அணி நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் கொடுத்த ஜேவிபி. சுனில் ஹதுன்ஹெத்தி வர இருப்பது ஜனாதிபத் தேர்தல் எனவே நமது தரப்பில் அனுராவும் உங்கள் தரப்பில் சஜித்தும் பகிரங்கமாக விவாதிப்பதுதான் பொறுத்தம். நாங்கள் விவாதத்துக்குத் தயார் என்று அதற்கு சுனில் பதில் கொடுத்திருந்தார். சஜித்தும் தானும் தயார் என்று பகிரங்கமாக இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டும் இருந்தார்.

Anura Kumara names his cabinet! (VIDEO) - LNW Lanka News Web

ஆனால் முன்பு விவாதத்துக்கு வருமாறு அழைத்த சஜித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர்ஷ, கபீர், நளில் அப்படி முடியாது நாங்கள்தானே முதலில் அழைத்தோம் எங்களுடன்தான் நீங்கள் விவாதத்துக்கு வர வேண்டும் என இப்போது புதுக் கதை சொல்லி வருகின்றார்கள்.

இதனால் பல தொலைக் காட்சிகள் அனுர-சஜித் விவாதத்துக்கு தயாராக இருந்தாலும் இப்போது அதற்கான வாய்ப்பு கம்மி.

நன்றி: 07.04.2024 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

இரு தேர்தலும் ஒன்றாக!

Next Story

குவியும் மைத்திரி செய்திகள்!