நஜீப்
நன்றி 23.11.2025 ஞாயிறு தினக்குரல்
நாமலும் அவரது ஆதரவாலர்களும் நுகேகொட பேரணிக்கு படையெடுக்கத் தயாராகிக் கொண்டிருந்த நாளுக்கு முன்னய நாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐஸ்லாந்தில் போய் இறங்கி அதிரடி காட்டி இருக்கின்றார்.
இது என்ன ஐஸ்லாந்துக் கதை! ஜனாதிபதி அப்படியெல்லம் பயணங்களை இந்த நாளில் அவர் மேற்கொள்ளவில்லையே என்று யோசிக்கின்றீர்களா?
ஆம் இங்கு ஐஸ்லாந்து என்று உச்சரிப்பது ராஜபக்ஸாக்கள் கோட்டை இன்று ஐஸ்லாந்தாக-போதை வியாபாரிகளின் மையமாக மாறி இருப்பதையே நாம் இப்படி உச்சரித்திருக்கின்றோம்.
தெற்கு ஹம்பாந்தோட்டை-தங்கல்லைக்குப் போய் இறங்கிய ஜனாதிபதி அனுர போதைப் பாவனைக்கு எதிரான மிகப் பிரமாண்டமான ஒரு பேரணியை நடாத்தி இருக்கின்றார்.
இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் செயல்பாட்டாளர்கள் மற்றும் படைத்தரப்பினரும் கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இது போன்ற போதைக்கு எதிரான செயலணிகள் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைய இருப்பதாகத் தெரிகின்றது.





