-நஜீப்-
நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல்
நமக்கு வருகின்ற தகவல்களின் படி ஜனாதிபதி அனுரவின் அரபுலக விசிட் இந்த மாதம் பிற்பகுதியில் ஏற்பாடாகி இருக்கின்றது. பிரதி சபாநாயாகர் டாக்டர் சாலி அல்லது முனீர் முலபர் இந்த பணயத்துக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கின்றார்கள்.
இந்த பயணத்தில் அனுர பல நாடுகளுக்கு ஓரே விசிட் என்று போய் இறங்க இருக்கின்றார். அடுத்த மாதம் நடுப்பகுதியில் அனுர அரசின் கன்னி பட்ஜெட் வர இருக்கின்றது. இதில் மக்களுக்கு பல சலுகைகள் வரலாம். அது கூட விமர்சனங்களுக்கு இலக்காகும்.
அதே நேரம் வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஜனாதிபதி தலைமையிலான என்பிபி. தனது பரப்புரைகளைத் துவக்கி விட்டது. களுத்துறை ஹோமகம மற்றும் அனுராதபுரம் கெகிராவக் கூட்டங்கள் இதனைத்தான் காட்டுகின்றது.
தேர்தலுக்கு ரணில்-சஜித் கூட்டணி பற்றி இதுவரை மூன்று சந்திப்புக்கள். இது ரணிலின் சதி என சஜித்துக்கு சந்தேகம். அதனால் கூட்டணி வந்தாலும் தவறினாலும் சஜித்துக்குத்தான் சிக்கல்.