நஜீப்
நன்றி:26.07.2026 ஞாயிறு தினக்குரல்
சில நிஜக் கதைகள் கற்பனைகளையும் விஞ்சிவிடுகின்றன. அதில் மெஸ்ஸி:39- யமல்:19 கதையும் வருகின்றது. இந்த யமல் பெற்றோர் மொரோகோ எக்குவட்டோரியல்-கினி பூர்வீகம். வறுமையில் பிழைப்புத் தேடி ஸ்பைனுக்கு வந்தவர்கள்.
அப்போது யமலுக்கு மூன்றே மாதங்கள். 2007 நவம்பரில் ஸ்பைனில் ஒரு விளம்பரம் வருகின்றது. 2008ம் வருட நாட்காட்டிக்கான புகைப்படங்களை எடுக்கின்றோம். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.
ஒரு தொண்டு நிறுவனக் கோரிக்கை அது. வந்த பல்லாயிரக்கணக்காக விண்ணப்பங்களில் சீட்டிலுப்பில் ஐந்தை தேர்ந்த நிறுவனம், அதில் தனக்கு விருப்பமான ஒன்றை எடுக்கும்படி மெஸ்ஸியை கேட்டது.
அந்தத் தேர்வுதான் இந்த அபூர்வம். அந்த நாட்களில் மெஸ்ஸி போட்டிகளுக்காக ஸ்பைனில் இருந்தார்.
அந்த விளம்பரத்தில்தான் மெஸ்ஸி லமின் யமலுடன் தோன்றினார். இந்தக் குழந்தையை 2026 உலகக் கோப்பை கிண்ணத்தில் தான் சந்திப்போம் என்று மெஸ்ஸி கற்பனை பண்ணி இருப்பாரா.!



