அந்தப் பெண் கெட்டவள்-மைத்ரி

நஜீப்

நன்றி: 19.10.2025ஞாயிறு தினக்குரல்

2015 ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் நானும் மைத்திரியும் ரணிலும் சந்திரிகாவை சந்தித்து நன்றி தெரிவிக்கச் சென்றிருந்தோம். அப்போது சந்திரிக்காவுக்கு மைத்ரி தனிப்பட்ட ரீதியில் நன்றி தெரிவித்தார்.

இந்த மைத்ரியை ஜனாதிபதியாக கொண்டு வந்து நிறுத்தியதில் சந்திரிக்கா ஆற்றிய பங்களிப்பு அதற்குக்காரணமாக இருந்தது.

ஓரிரு மாதங்களில் நான் ஜனாதிபதி மைத்திரியுடன் பேசிக் கொண்டிருந்த போது அந்தப்பெண் கெட்டவள் அவளுடன் வேலை செய்ய முடியாது என்று தறுமாறுமாக சந்திரிக்காவை அவர் திட்ட ஆரம்பித்தார்.

அவர் ஒரு நன்றி கெட்ட மனிதன் இப்படி ஒரு ஊடகச் சந்திப்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்க அதிரடியாகத் தெரிவித்தார். ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி கதைகளை நாமும் கேட்டுத்தானே வந்திருக்கின்றோம்.

அரசியலில் நண்பர்களும் கிடையாது பகைவர்களும் கிடையாது என்ற கதை போலத்தான் இதனையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் என்னதான் இதில் பேச வேண்டி இருக்கின்றது.

Previous Story

'பைசன்' திரைப்படம் எப்படி உள்ளது!

Next Story

ඉෂාරා සෙව්වන්දි තවත් රහසක් හෙළි කරයි