இந்த வகையான மறுசீரமைப்பு இலங்கை வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்டதில்லை.
அந்தவகையில் புலனாய்வு துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதோடு, சிலருக்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாது அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கின்றது அநுர அரசு.
மக்கள் விடுதலை முன்னணி இன்று தேசிய மக்கள் சக்தியாக மாறினாலும் புலனாய்வு துறையின் மீது அவர்கள் நீண்ட நாள் வைத்த இலக்கின் அடைவு மட்டத்தை தற்போது அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது.