நஜீப்
நன்றி: 19.10.2025ஞாயிறு தினக்குரல்
நாம் என்னதான் பேசினாலும் விமர்சனங்களைச் செய்தாலும் ஜனாதிபதி அணுரகுமார திசாநாயக்க ஒரு அசாதாரண திறமைசாலிதான் என்பதனை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இப்படி கருத்துக் கூறி இருக்கின்றார்.
ரணில் அணியைச் சேர்ந்த சிரால் லக்திலக்க. எனவே அணுராவுக்கு நிகரான தலைவர்கள் எதிரணியில் இல்லாதிருப்பது பெரும் பலயீனமாக பார்க்கப்படுகின்றது. எனவேதான் எதிரணிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாமாக இருந்து வருகின்றது.
ஆனால் இந்த இணைவு தன்னலத்துக்கான ஒரு நகர்வாக இருப்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது. ரணில் தரப்பு சஜித்துடன் இணைவதில் ஆர்வமாக இருந்தாலும் சஜித்துக்கு அந்தளவு ஆர்வம் கிடையாது.
அதே நேரம் கட்சியின் தலைமை மற்றும் நிருவாக ரீதியிலான பதவிகள் செயற்குழு என்று வரும் போது கூட்டணி ரணகளமாகும் என்பதனை மட்டும் நமக்கு உறுதியாக சொல்ல முடியும்.
யார் என்ன பேசினாலும் சஜித் ஒத்துழைப்பின்றி அமையும் எந்தக்கூட்டும் குப்பையில் என்பது உறுதி.