நஜீப்
நன்றி: 12.04.2026 ஞாயிறு தினக்குரல்
தமிழகத் தேர்தலில் ஆர்வம் காட்டுகின்ற நமது வாசகர்களுக்கான தகவல் இது. பிரபல்யமான தொலைக் காட்சிகளும் அச்சு ஊடகங்களும் கூட வெளியிட்டு வருகின்ற கருத்துக் கணிப்புக்கள் நியாயமானதாக இல்லை என்பது நமது கடுமையான குற்றச்சாட்டு.
அப்படி இருக்க சமூக ஊடகங்களின் நிலையை கேட்கவும் வேண்டுமா? அவை கண்களையும் காதுகளையும் மூடிக் கொள்ளும் அளவுக்கு அட்டகாசமாகவும் அசிங்கமாகவும் இருக்கின்றது.
வரலாற்றில் என்றுமில்லாத ஒரு முக்கோணப் போட்டிதான் அங்கு காணப்படுகின்றது. தமிழகத் தேர்தல் பற்றி ஒரு கட்டுரை எழுத மாட்டீங்களா என்று பல நண்பர்கள் எம்மைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்கு நமது வார்த்தைகளில் அந்தத் செய்திகளை கேட்கும் நாட்டம் இருப்பதை நாம் அறிவோம். அடுத்த வாரம் என்னதான் செய்திகள் வந்தாலும் நாம் தேர்தல் பற்றியே எழுதலாம் என்று இருக்கின்றோம்.
இந்தத் தேர்தல் முடிவுகள் ஆரோக்கியமான ஒன்றாக அமையும் என்று நமக்குத் தோன்றவில்லை.





