நஜீப்
நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல்
அரசியலில் நாம் நெடுநாளாக சொல்லி வருகின்ற கருத்துக்கள் கணிப்புக்கள் யதார்த்தமாவதை வாசகர்கள் அறிவார்கள். தமிழ்நாடு தேர்தலில் நாம் விஜய் பற்றி தந்த தகவல்கள் இதற்கு நல்லசாட்சி.
அப்படி இருக்க 2029ல் விமல் ஜனாதிபதி என்ற நமது இந்த செய்தியை படிக்கின்றவர்கள் என்னடா மனிதன் இப்படி ஒரு கதை சொல்லி இருக்கின்றான் என்று யோசிக்கலாம். கதை இதுதான் இது விமல் கனவு.
இந்த நாட்டில் ஜனாதிபதியாக தனக்கு அனைத்து தகைமைகளும் இருப்பதாக விமலே பேசி வருகின்றார். ஆம் இவருக்கு இப்படியும் தகைமைகள் இருப்பதை நாடு அறியும். ஜேவிபி.க்கு தப்பாக பிறந்த குழந்தைதான் விமல். இதனால் ஆளை கழுத்தால் பிடித்து அவர்கள் வெளியே தள்ளிவிட்டார்கள்.
இன்று அரசியல் அரங்குகளில் இனவாதியாகவும் கோமாளியாகவும் அவர் நடித்துக் கொண்டிருக்கின்றார். போலி அடையாள அட்டை கடவுச் சீட்டுகள் தயாரிப்பதில் நிபுணர். மோசடிகள் தொடர்பில நிலுவையில் பல குற்றச்சாட்டுகளும் இவையும் சிறப்புத் தகைமைகள்தானே.




