ஈரானின் ‘சுப்ரீம் லீடர்’ என கருதப்பட்ட மதகுரு அயதுல்லா அலி கமேனீ கொல்லப்பட்ட நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் உச்சகட்டஹ்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இக்கட்டான நிலையில், ஈரான் நாட்டை வழிநடத்த நாட்டின் தலைமை மதகுரு பதவிக்கான புதிய தேர்வு இன்று நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த அயதுல்லா அலி கமேனீ-ன் மகன் அடுத்த சுப்ரிம் லீடராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் உலாவுகின்றன. ஈரான் மீது கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மத்திய கிழக்கு அரசியல் சூழலை பரபரப்பாக மாற்றியுள்ளன.
டெஹ்ரான் நகரின் முக்கிய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்குப் பின்னர், பாதுகாப்பு காரணங்களால் இரு நாடுகளின் வான்வழிப் போக்குவரத்து பாதைகள் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல்படை இஸ்ரேலை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் முதல் கட்டத் தாக்குதலைத் தொடங்கியதாக அறிவித்துள்ளது. ஈரான் இஸ்ரேல் மோதல் இதனால், இஸ்ரேல் முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த எதிர்தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த தாக்குதல்களின் விளைவாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் அவருடைய குடும்பத்தினரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல் இந்தச் சம்பவத்தையடுத்து ஈரானில் 40 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், 7 நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு காரணமாக ஈரான் அணு ஆயுதத் திட்டம் குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, கூட்டு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் ஆப்பு அலி கமேனி மரணம் அதேபோல், ஒரு பெண்கள் தொடக்கப் பள்ளி மீது ஏவுகணை வீசப்பட்டதாகவும், இதில் பல மாணவிகள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், ஈரானின் புதிய தலைமை மதகுரு யார் என்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மொஜ்தபா கமேனி
உயிரிழந்த கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவருடன், ஈரானின் முதல் தலைமை மதகுருவான அயதுல்லா ரூஹோல்லா கோமேனி அவர்களின் பேரன் ஹசன் கோமேனி போட்டியாளராக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் தலைமை மதகுரு தேர்வு இந்த தலைமை மாற்றம் ஈரானின் உள்நாட்டு அரசியல் திசையையும், வெளிநாட்டு உறவுகளையும் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கெனவே நிலவும் பதற்றமான சூழலில் இந்தத் தீர்மானம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஒரு ஆண்டுக்குள் மீண்டும் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன. மத்திய கிழக்கு பதற்றம் இந்தத் தாக்குதல்களால் பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழல் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் பதற்றம் குறையும் வாய்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், தலைமை மாற்றம், ராணுவ மோதல், மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவை ஒன்றாக இணைந்து மத்திய கிழக்கில் மிகவும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
புதிய தலைமை மாற்றம் ஈரானின் அரசியல் நிலைப்பாட்டை மட்டுமல்லாமல், உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.



