அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள தடை

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் மாலைகள், கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர்/ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், மற்றும் பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகள் ஆகியவை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடை செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால பதில் செயல் திட்டம்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள தடை | Ban On Plastic Items For Next Two Weeks

இதேவேளை மத்திய சுற்றாடல் அதிகார சபையானது (CEA) நாட்டின் காற்றின் தரப் பாதுகாப்பு நிலையை அறிக்கை அளிப்பதற்கான அவசரகால பதில் செயல் திட்டம் ஒன்றை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் மேலும், சுற்றாடல் அமைச்சு, மின்சாரம் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Gallery Gallery Gallery

Previous Story

பாகிஸ்தானில் ரயில் விபத்து: 22 பேர் உயிரிழப்பு; 80 பேர் படுகாயம்

Next Story

2024ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் பரீட்சை!