அச்சுறுத்தலும் சட்ட நடவடிக்கைகளும்

மனிதன் உயிர் வாழ்வதும் அவனது உயிரைப் பறிப்பதும் இறைவன் பார்க்கும் வேலை, என்றாலும் கடவுள் பார்க்கும் அந்த வேலையை சில மனிதர்கள் செய்து விடுவதும் உண்டு. ஆனால் அதற்கும் கடவுளின் சம்மதம் இருக்க வேண்டும். ஊடகத்துறைக்கு அச்சுறுத்தல்கள் ஒன்றும் புதிய விடயம் அல்ல.!

தேசிய சர்வதேச விமர்சனங்களை, செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்ற நமக்கு எங்கோ ஒரு மூளையில் நடக்கின்ற ஒரு குட்டிச் செய்தி மீது ஏன் இந்த ஆர்வம்-அக்கறை என்று நம்மைப் பற்றித் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் கூட யோசிக்கலாம். அதற்குப் பதில், மண் மீதுள்ள நமக்கான உறவுதான் இது.

‘எது உண்மை கல்விக் காரியாலயம் தரும் பதில் என்ன’ 

எது உண்மை கல்விக் காரியாலயம் தரும் பதில் என்ன’ என்ற நமது செய்தி  ஒரு பிரதேசத்தில் வைரலாகி வருகின்றது. நமது அந்த செய்தி மீதுள்ள ஆர்வம் காரணமாக அதனை பலர் தமது வட்சப் மற்றும் டுவிட்டர் பதிவுகளில் அடுத்தவர்களுக்குப் பகிந்து வருகின்றார்கள். அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத ‘ஒரு சிலர்’ சேயர் பண்ணியவர்களை அச்சுறுத்தியதாக நமக்குத் தகவல்கள் வருகின்றன.

அவர்களுக்கு நாம் கூறும் ஆலோசனை உங்களை அச்சுறுத்தியவர் தொலைபேசி இலக்கம் அவர்கள் அச்சுறுத்தும் போது நீங்கள் பதிவு செய்து கொண்ட ரெக்கோர்டிங் அல்லது சம்பவம் நடந்த இடம் எம்பவற்றை நீங்கள் எமக்குக் கையளித்தால்-தெரியப் படுதினால் நாம் உங்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர முடியும். மேலும் உங்களை அச்சுறுத்தியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நாம் உதவி செய்ய முடியும் என்பதனை எமது அபிமானிகளுக்கு-வாசகர்களுக்கு பகிரங்கமாக அறியத் தருகின்றோம்.

மேலும் நிறுவன முத்திரைகளை (லோகோ)  துஷ்பிரயோகம் செய்து ‘சேறு பூசும்’ செய்திகளை வெளியிடுகின்றவர்கள் மீது சட்ட நடவக்கைகளை எடுப்பதற்கு நாம் தகவல் அறியும் உரிமையின் கீழ் சட்டத்தரணிகளுடாக தற்போது கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதனையும் அறியத் தருகின்றோம்.

பிரதம ஆசிரியர்

Previous Story

தலைவர் அஷ்ரப் பெயர் வேண்டாமென்னுமளவுக்கு SLMC செயற்பாடுகள்

Next Story

உலகின் அழகிய கட்டடம் துபாயில் கோலாகல திறப்பு