நஜீப்
நன்றி:22.02.2026 ஞாயிறு தினக்குரல்
தற்போது ரி20 போட்டிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்து வருகின்றது. இதில் சில போட்டிகள் மிகவும் பரபரப்பானவை.
இதில் உச்சம் தொட்ட ஒரு போட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது. அந்த நாடுகளில் மட்டுமல்ல உலகம் பூராவிலுமுள்ள கிரிக்கட் ரசிகர்களின் ஆர்வத்தை இது தூண்டியிருந்தது.
அண்மைய ரி20 போட்டிகளில் இந்தியா எட்டுப் போட்டிகளிலும் பாகிஸ்தான் ஒரே ஒரு போட்டியிலும் ஜெயித்திருந்தது. எனவே இந்தியா ஜாம்பவான் என்பது தெரிந்ததே.
நமக்கு இது சமபலமில்லாத ஆட்டம். ஆனாலும் பாகிஸ்தான் ஜெயிக்கும் என்று நம்பிக்கையில் போட்டியைப் பார்த்தவர்களும் இருந்தார்கள். அது அவர்களின் உரிமை.
ஆனால் இந்தியாவுடன் போட்டிக்கு பாகிஸ்தான் வீரர்கள் ஒரு அச்ச-பய உணர்வுடன்தான் மைதானத்தில் கால்பதிக்கின்றார்கள். இதுதான் தோல்விக்கு அடிப்படை.
முன்னாள் பாக். வீரர் அப்ரிடி தனது மருமகன் போன்றவர்களை அணியிலிருந்து துரத்திவிடுங்கள் என்று பேசி இருக்கின்றார்.




