அக்குறணை றஷீதியா அறபுக் கலாசாலைக்கு புலமைப் பரிசில் !

Apply Now on Red Button Enter on Black Computer Keyboard.

(Hafeez) 

அக்குறணை தெழும்புகஹவத்தையில் இயங்கும்  றஷீதியா அறபுக் கலாசாலைக்கு ‘ஷரீஆ’ மற்றும் ‘ஹிப்ழ்’ பிரிவுகளுக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அரசினால் நடத்ப்பட்ட தரம் ஐந்து புலமை பரிசில் புள்ளிகள் அடிப்டையில் மாணசர்கள் இலவசமாக இணைத்துக் கொள்ளப்படுவர் என அதன் அதிபர் அஷ்ஷேக் அனஸ் முஹம்மட் (நளீமி).  தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில் தரம் 9ல் சித்திடைந்தவர்கள் ‘சரீஹா’ பிரிவிற்கும், தரம் 6 ல் சித்தியடைந்தவர்கள் ‘ஹிப்ழு’ பிரிவிற்கும் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.

இதில் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றவர்களுக்கு தங்குமிட வசதி உணவு உற்பட  சகல வசதிகளுடனும், கட்டணங்கள் இன்றி இலவசமாக சேர்த்துக்கொள்ளப்படுவர்.

அத்துடன் 100 புள்ளிகளுக்கு மேல்பெற்றவர்களுக்கு 50 சதவீதம் சலுகையும் 70 ற்குமேற்பட்ட புள்ளிளைப்பெற்றவர்களுக்கு 25 சதவீத சலுகையும் வழங்கப்படும்.

‘சரீஹா’ பிரிவிற்கு சேர்த்துக்கொள்ளப்படும் தரம் 9ல் சித்திடைந்தவர்களுக்கு கலாசாலையால் நடத்தப்படும் பரீட்சையின் புள்ளிகளின் அடிப்படையில் மேற்படி சலுகைகள் வழங்கப்படும்.

மேற்படி வசதிகளுக்கு மேலதிகமாக  சிங்களம், ஆங்கிலம் முதலான மொழிகளும் கற்பிக்கப்படும்.  இணைந்துகொள்ள விரும்புவோர்  0777805645 என்ற இலக்கத்திற்கு  பின்வரும் விபரங்ளை அனுப்பவைக்கவும்.

விண்ணப்பிக்கும் பிரிவு, தகப்பன் பெயர்,  மாணவர் பெயர், பிறந்த திகதி,  தொலைபேசி இலக்கம், முகவரி உற்பட்ட விபரங்களை Whatsapp  ஊடாக அனுப்பி வைக்கவும்.

Previous Story

இராணுவம் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும்-ஐ.நா 

Next Story

USA சவூதி தூதரகத்திற்கு முன்னால் உள்ள வீதிக்கு ஜமால் கசோக்கியின் பெயர்