நஜீப்
நன்றி:18.01.2025 ஞாயிறு தினக்குரல்
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரு பிரதேச சபைதான் அகுரண. நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் என்று வரும் போது அங்கு ஹீரோ அந்தஸ்தில் இருந்தவர் ஏசீஎஸ். ACS.ஹமீட்.
அவருக்குப் பின்னர் மருமகன் ஹலீம் நெடுநாளாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்திதுவம் செய்து வந்தாலும் அவர் அங்கிருந்தார் என்பதற்கு ஆதாரம் சம்பளப்பட்டியல்தான் என்ற நிலை.
அதே போன்று காதர் ஹக்கீம் பைசர் நாடாளுமன்றம் நுழைய அக்குரண வாக்குகள் உதவியது. இன்று பாரூக் NPP. உறுப்பினராக அக்குரணையை பிரதிநிதித்துவம் செய்கின்றார்.
ஆனால் தான் பிரதிநிதித்துவம் செய்யும் அகுரணயை அவர் SJB.யிடம் பறிகொடுத்தார். இது NPP. பலயீனங்களால் நடந்தது. இந்தத் தோல்வி பற்றி நாம் முன்கூட்டியே சொல்லி இருந்தோம்.
இன்று பேரழிவு புனர்நிர்மானங்கள் தொடர்பில் தவிசாளர் இஸ்திஹார்–பாரூக் இடையே கடும் முறுகல் நிலை. சிங்களத் தம்பியா என்றெல்லாம் சபையில் இனவாத கருத்துகள் தாராளமாக உச்சரிப்பாம்.!





