யாரிந்த கோடாரிக் காம்பு முஸ்லிம்களின் பார்வைக்கு அதிரடி தகவல் பாருங்கள்!විහාරාධිපති හොරෙන්ම විවාහ වෙලා. ගණිකාවක් සමග ආවාස කුටියේ.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் பற்றி முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் தெரிந்துதான் வைத்திருக்கின்றார்கள்.

இதில் ஞானசார தேரர் உதய கம்மன்பில போன்ற தேரர்கள் முக்கிய பங்கு வகித்திருந்தனர். அதே நேரம் மஹிந்த-கோட்டா காலத்தில் இது உச்சம் தொட்டிருந்தது. ஆனால் இதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் தேரரும் இருந்திருக்கின்றார்.!

ஈஸ்டர் தாக்குதலில் முஸ்லிம்களை பாவித்தது தொடர்பில் துவான் சுரேஸ் சலே பற்றி இப்போது நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகி இருக்கின்றது.

இந்த நிலையில்தான் முஸ்லிம் சமூகத்தில் மற்றுமொரு கோடாரிக் காம்பு செயல்பட்டிருப்பது பற்றிய தகவல் தெரிய வந்திருக்கின்றது. இது ஒரு வித்தியாசமான சினிமா கதை போல ஒன்று.

Cartoon by Udaya Gammanpila

இது பற்றி தகவல்களை ஈதல இணையதளம் (சிரிலால் பிரியந்த) விரிவாக சொல்லி இருக்கின்றது மொழி புரிந்தவர்கள் கேட்டு விட்டு அடுத்தவர்களுக்கும் கதையை எச்சரிக்கைக்காக சொல்லி வையுங்கள்.

முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்விழத்து விட்டதில் முக்கிய பங்கு வகித்த மொகம்மட் ஹசனின் கதைதான் இது.

பிறப்பால் முஸ்லிம். பின்னர் பியகம சுசில தேரர் என்று கட்டன மற்றும் நுகேகொட விகாரைகளில் இவர் சமகாலத்தில் பிரதம தேரராக பணி புரிந்திருக்கின்றார். அவர் பற்றிய அதிரடி தகவல்கள்தான் இது.

பியகம சுசில – ஆள் அடையால அட்டை இல.851200967வீ விநியோகத் திகதி 2011.09.07

இந்த இலக்கத்துக்குரிய பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயர் மொகம்மட் சியான் ஹசன். பிறந்த இடம் பதுள்ளை-வெலிமடை வைத்தியசாலை. முகவரி காட்டும் ஊர் வெளிமட – கெப்படிபொல.

இவரது தந்தை மொகம்மட் இம்டியாஸ் ஹசன். பாட்டனார் பெயர் மொகம்மட் ஜூனைத் ஹசன்.

ஹதபானகொட முதலிகே தொன் திஹான் சமிந்த என்ற பெயரில் தேரராகி மேற்சொன்ன விகாரைகளில் கடமையாற்றி இருக்கின்றார்.

ஈத்தல தருகின்ற தகவல்படி முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளில் இந்த தேரர் சுசில-மொகம்மட் ஹசன் தீவிரமாக பணியாற்றி இருக்கின்றார்.

சரத் பொன்சேக்கா கட்சியில் தேரர்கள் அணியில் செயலாளராக இருந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி ஞானசார தேரருடன் இணைந்து முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதில் பங்களித்திருக்கின்றார்.

பின்னர் கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் செயலாளராகவும் பணியாற்றி இருக்கின்றர். இந்த பியகம சுசில-மொகம்மட் ஹசன் தேரர்.

கட்டன விகாரையில் இருக்கும் போது இரவு நேரங்களில் விபச்சாரிகளை அங்கு எடுத்து வந்து கையும் களவுமாக மாட்டி விகாரையிலிருந்து விரட்டப்பட்டிருக்கின்றார்.

இது பற்றி கொச்சிகடை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 279/210 பக்கப் பதிவுகள் இதனை உறுதி செய்கின்றது.

தான் விபச்சாரியுடன் கையும் களவுமாக பிடிபட்டதை தேரர் கையெழுத்தில் விகாரை நிருவாகிகளுக்கு கடிதமும் எழுதிக் கொடுத்திருக்கின்றார்.

நுகேகொட உடஹமுல்ல விகரையில் இருக்கும் போது இரவு நேரங்களில் காவி உடைகளை களைந்து விட்டு டெனிமும் டீ -சேர்ட்டும் போட்டுக் கொண்டு தொம்பே வைத்தியசாலை வீதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அடிக்கடி போய்வர அங்கும் மாட்டி இருக்கின்றார்.

இது பற்றி தேடிப்பார்த்த போது இந்த வீட்டில் இருக்கும் பெண் இவரது சட்டரீதியான மனைவி.! 10.11.2016ம் திகதி கம்பஹ தியனேகோரல செயலகத்தில் அந்தப் பெண்ணைப் பதிவுத் திருமணம் பண்ணி இருக்கின்றார் பியகம சுசில-ஹசன் தேரர்.

அந்தப் பெண்ணுக்கு கம்பஹ வைத்தியசாலையில் 13.04.2017ல் ஒரு குழந்தை பிறந்திருக்கின்றது.  திகதியை சற்று அவதானித்துப் பாருங்கள்.அட கடவுளே?

இது தவிர விகாரை நிதியை மனைவி மற்றும் தனது பெயரில் வைப்பு (இணை கணக்கு) செய்து விகாரைப் பணத்தை கொள்ளையடித்த குற்றம். இன்னும் பல நிதி மோசடிகள்  பற்றிய குற்றச்சாட்டுக்களும் இவர் மீது இருக்கின்றது. இப்போது மனிதன் தலைமறைவாம்.

என்ன நடந்திருக்கின்றது? ஹசன் எப்படி பியகம சுசில தேரராகி சமூகத்துக்கு தூரோகம் பண்ணினார்.? அது ஏன்? இதன் பின்னணி என்ன என்பது பற்றி உலமா சபை மற்றும் முஸ்லிம் சமூகம் தேடிப் பார்க்குமா?

Previous Story

BBC Tamil TV News