நஜீப்
(நன்றி: 31.08.2025 ஞாயிறு தினக்குரல்)
மலைக்கும் குன்றுக்கும் தொடர்பு இருக்கு. இதற்குள் எப்படி முன்னாள் ஜனாதிபதி ரணிலை இணைப்பது.! அது இப்படித்தான், மனைவியையும் பரிவாரங்களையும் லண்டனுக்கு உல்லாசம் அழைத்துச் சென்று பொதுமக்கள் பணத்தில் 160 இலட்சங்களை ஊழல் செய்ததாக ரணில் மீது குற்றச்சாட்டு.
ஆனால் அவர் மீது நிலுவையில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்களை பார்க்கும் போது இது சிறு குன்றுபோல ஒன்றுதான். மலையளவு பெரிய விவகாரங்கள் பல இருக்கின்றன.
அது இமயமா சிவனொலிபாதமா என்பதனை சட்ட வல்லுணர்கள்தான் கணித்து நமக்கு சொல்ல வேண்டும்.
இதில் படலந்தை படுகொலைகள், வங்கிக் கொள்ளை, பட்டாம் பூச்சி பாட்டனர் படுகொலை என்பன மிக மிக பாரதூரமான குற்றச்சாட்டுக்களும் அடக்கம்.
படலந்தை படுகொலைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தகூட ரணிலுக்கு எதிராக ஜெனீவா போய் முறைப்பாடு கொடுத்திருந்தார். வேடிக்கை இப்போது அவர்கள் அனைவரும் ரணிலுக்காக ஆஜராகி வருவதுதான்.