ஹை டெக் டிரோன்,ஏவுகணை,பாம்! உக்ரைனுக்கு  அனுப்பும் அமெரிக்கா!

நியூயார்க்: உக்ரைனுக்கு அமெரிக்க கூடுதல் ராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. முக்கியமாக டிரோன்களையும், விமானங்களை தாக்கி அழிக்கும் சிறிய ரக லாஞ்சர்களையும் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நேற்று அமெரிக்கா நாடாளுமன்றத்தில் வீடியோ மூலம் உரை நிகழ்த்தினார். இதில் அமெரிக்கா உக்ரைன் வான் பாதையை மூட வேண்டும். அங்கே விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

வான்வெளி பாதையை மூட விரும்பவில்லை என்றால்.. குறைந்த பட்சம் விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்குங்கள். ஏவுகணைகளை மறித்து தாக்கும் ஆண்டி ஏவுகணை சிஸ்டம்களை வழங்குங்கள் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

பிடன் பேச்சு

ஆனால் அமெரிக்க அதிபர் பிடன் உக்ரைன் வான்வெளி பாதையை மூடும் முடிவில் இல்லை. உக்ரைன் வான்வெளி பாதையை அமெரிக்கா மூடும் பட்சத்தில், அங்கு ரஷ்யா விமானங்கள் பறந்தால் அதை அமெரிக்க படைகள் அல்லது நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் அமெரிக்கா ரஷ்யா இடையே நேரடி போர் ஏற்படும். எனவே உக்ரைன் வான்வெளி பாதையை மூட பிடன் மறுத்து வருகிறார். அதோடு உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கவும் அமெரிக்கா மறுத்துவிட்டது.

கூடுதல் உதவி

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கினால் அமெரிக்கா நேரடியாக போரில் இறங்குவதற்கு சமமாகும். இந்த நிலையில்தான் உக்ரைனுக்கு போர் விமானங்களை தவிர்த்து மற்ற ராணுவ உதவிகளை வழங்க போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய பிடன், உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலருக்கு ராணுவ உபகரணங்கள் உதவியை செய்ய போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அமெரிக்கா 300 மில்லியன் டாலர்களை அறிவித்துள்ள நிலையில் தற்போது கூடுதல் உதவிகளை அறிவித்துள்ளார்.

குண்டுகள்

அதன்படி 800 ஸ்டிரிஞ்சர் ஏவுகணைகளை அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இவை ஆண்டி ஏர்கிராப்ட் ஏவுகணைகள். விமானங்களை குறி வைத்து பூமியில் இவரை தாக்கும். அதேபோல் 100 கிரேனேட் லாஞ்சர்களை வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 20 மில்லியன் சிறிய அளவிலான குண்டுகளை வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது உக்ரைனுக்கு போரில் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

டிரோன்

அதேபோல் உக்ரைனுக்கு அமெரிக்கா டிரோன்களை கொடுக்கும் முடிவிலும் இருக்கிறதாம். ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, உகிரியானுக்கு அமெரிக்க தயாரிப்பில் உருவாக்கப்பட்ட டிரோன்கள் வேறு சில நாடுகள் மூலம் வழங்கப்படும். இவர் போர் விமானங்களின் கணக்கில் சேராது. அதே சமயம் இவை மூலம் ரஷ்ய எல்லைக்குள் புகுந்து சிறிய ரக குண்டுகளை வீச முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

என்ன கொடுக்க போகிறது

அதன்படி மொத்தமாக

800 ஆண்டி விமான ஏவுகணை,

2000 ஜாவேலின் ஏவுவகை,

1000 பீரங்கி அழிக்கும் ஏவுகணை,

6000 பீரங்கி அழிக்கும் ஏடி

4 ஏவுகணை,

100 சிறிய ரக டிரோன்கள்,

100 கிரேனேட் லாஞ்சர்கள்,

5000 துப்பாக்கிகள்,

1000 கை துப்பாக்கிகள்,

400 மிஷின் துப்பாக்கிகள் .

25000 கவச உடைகள், ஹெல்மெட்கள் வழங்கப்பட உள்ளது.

Previous Story

தங்க நகைக்காக  அடுத்தடுத்து நடந்த கொலைகள்!

Next Story

இந்தியா இலங்கைக்கு ரூ.100 கோடி டாலர் கடன் உதவி!