ஹிருணிக்கா அபூர்வக் கருணை!

நஜீப்

நன்றி: 22.03.2026 ஞாயிறு தினக்குரல்

தனது தந்தை பாரத லக்ஷமனை மனை ஒரு தேர்தல் நாளில் தெருவில் வைத்து சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை குற்றவாளியாக உள்ளே போனவரை  ராஜபக்ஸாக்கள் காலத்தில் பொது மன்னிப்பில் விடுதலை கொடுத்து அவரை அரசியல் அதிகாரம் மிக்க பதவியிலும் அமர்த்தினார்கள்.

அவர்தான் துமிந்த சில்வா. பின்னர் அவருக்கு எதிராக போர் கொடி தூக்கி பொது மன்னிப்பை கேள்விக்குற்படுத்தினார்  மகள் ஹிருணிக்கா. துமிந்தவுக்கு மீண்டும் தண்டனை. அது பழைய செய்தி.

புதுக்கதை பார்ப்போம் இதன் பின்னர் தான் துமிந்த சில்வா மீது வஞ்சம் தீர்த்துப் பாவம் தேடப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருக்கின்றர் அவர். ஹிருணிக்கா பல்டி தொடர்பாக பல்வேறு கதைகள் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன.

ஆனால் குற்றவாளிகளை மன்னிப்பது நமது அரசியல் படி ஒரு ஜனாதிபதியால் மட்டுமே முடியும். காசுக்காக இப்படி பலருக்கு விடுதலையும் கிடைத்திருக்கின்றதாம்.

Previous Story

புனித அல்-அக்ஸா மசூதியை மூடிய இஸ்ரேல்..

Next Story

சிதறிய 16 விமானங்கள்!அதிரடி காட்டிய ஈரான்