-நஜீப்-
நன்றி: 15.12.2024 ஞாயிறு தினக்குரல்
சீனா நெடுங்காலமாக நமது நாட்டுக்கு நட்பு நாடு. தற்போது செஞ்சட்டைக்காரர்கள் இங்கு அதிகாரத்துக்கு வந்திருப்பதால் இலங்கை அரசுக்கு உதவி செய்கின்ற நோக்கத்தில் 2025 கல்வி ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடையை இலவசமாக வழங்க முன்வந்திருக்கின்றது.
அது அப்படி இருக்க கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹதுன்ஹெத்தி தாம் தைத்த சீருடைகளை மாணவர்களுக்கு வழங்க இருப்பதாக ஒரு கருத்தை சொல்லி இருக்கின்றார். அதற்கு அவர் காரணமும் கூறுகின்றார். நல்ல விடயம் என்று அதனை எடுத்துக் கொண்டாலும் அதில் சிக்கல்கள் இருக்கின்றது என்று நாம் முன்கூட்டி அமைச்சருக்குச் சொல்லி வைக்கின்றோம்.
நாட்டிலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் அணிகின்ற சீருடைகளில் வித்தியாசமான வடிவமைப்புக்கள் பேனப்பட்டு வருகின்றன. அதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளில் மாணவிகளின் சீருடைகளில் கணிசமான வித்தியாசங்கள் பாடசாலைக்குப் பாடசாலை வேறுபடுகின்றன.
சில தமிழ் பாடசாலைகளிலும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இதனை அமைச்சர் ஹதுன்ஹெத்தி புரிந்து கொள்ள வேண்டும். இதிலும் அரசாங்கத்துக்கு விமர்சனங்களுக்கு இடமிருக்கினறன.