ஹக்கீம் தேவைகள்தான் என்ன!

-நஜீப்-

Muslims must jettison corrupt SLMC (and its numerous off-shoots, too) | ThinkWorth

ஜனாதிபதி ரணிலை சந்திக்க நேரம் கேட்பது நமது அரசியலில் புதிய ஒரு பெஷனாகி விட்டது. தமிழ் தலைவர்கள் போனார்கள் வந்தார்கள் சந்தித்தார்கள். நடந்தது ஏதுவுமே கிடையாது. தமிழர்களைச் சந்தித்த போது தங்களுக்கும் ஒரு வாய்பை இதற்கு முன்பும் ஹக்கீம் கேட்டார். அப்போது மலையக தலைவர்களைச் சந்தித்த பின்னர் திகதி தருவதாகச் சொல்லி இருந்தார் ஜனாதிபதி ரணில்.

WikiLeaks: Justice Minister Hakeem Knows Who The Abductors Are - Colombo Telegraph

ஹக்கீமின் ஆட்களில் பெரும்பாலானவர்கள் ரணிலுடனும் அரசாங்கத்துடனும்தானே இருக்கின்றார்கள்.? இப்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச மு.கா. ஹக்கீம் ஜனாதிபதி ரணிலிடம் சில தினங்களுக்கு முன்னர் நேரம் கேட்க, வடக்கு கிழக்கு மட்டுமா அதற்கு வெளியே இருக்கின்ற முஸ்லிம் பற்றியும் பேசுவோம் என்று ஒரு போடு போட்டிருக்கின்றார் ஜனாதிபதி ரணில்.

சரி, ஹக்கீம் வடக்குக் கிழக்கு முஸ்லிம்கள் தொடர்ப்பில் இனம் கண்டிருக்கின்ற பிரச்சினைகள் அதற்கு அவர் எதிர்பார்க்கும் தீர்வுதான் என்ன? நாமும் அரசியலில் இருக்கின்றோம் என்பதனை காட்சிப்படுத்தத்தான் இவை எல்லாம். என்ன நாம் பார்க்காத நாடகங்களா இவை. சமூகம் எச்சரிகையாக இருந்து கொண்டால் நல்லது.!

நன்றி: 13.08.2023 ஞாயிறு தினக்குரல்

தமது பதவிக் காலத்தில் இறுதி நிமிடங்கள்

-நஜீப்-

தற்போது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் கடுகதி வேகத்தில் பயணிப்பது போல தெரிகின்றது. அவர் இந்தப் பயணத்தை ஐந்தாம் தலைமுறை விமானத்தின் வேகத்தில் சென்றாலும் எதுவுமே ஆகப் போவதில்லை. அப்படி ஒரு இலக்கு அந்தப் பயணத்தில் கிடையாது. ரணில் தொடர்ந்து அரசியல் களத்தில் இருப்பதானால் இந்தியாவின் உதவி அவருக்குத் தேவை.

அவருக்கு உள்நாட்டில் ஆதரவு கிடையாது. இது யதார்த்தம். அதனால்தான் இந்த வேகம். மொட்டுக் கட்சி வேட்பாளர் ரணில் கிடையாது என்பதனை அதன் செயல்பாட்டாளர்கள் தெளிவாக அறிவித்து விட்டார்கள். அதனால் இங்கு மிகப் பெரிய நாடகமொன்று நடக்கின்றது. இதனை பாமர மக்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் சிறுபான்மைத் தலைமைகள் அறிந்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்களும் ரணில் நடவடிக்கைகள் தொடர்ப்பில் இன்னும் விசுவாசத்தில் இருக்கின்றார்கள். பொருத்திருந்து பாருங்கள் நடப்பதை. தமது பதவிக் காலத்தில் இறுதி நிமிடங்கள் வரை ரணில் மற்றும் ராஜபக்ஸாக்களின் இந்த ஆட்டங்களை விரும்பியோ விரும்பாமலோ குடிகள் பார்த்துத்தான் ஆகவேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு நாடகமும் வாக்கு வேட்டைக்கான முதலீடு மட்டுமே!

நன்றி: 13.08.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

துருக்கியின் அதிரடி ஆட்டம்!

Next Story

நாள் ஒன்றுக்கு 24 மணி நேரம் என்று 4000 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வாறு கணக்கிட்டனர்?