ஹக்கீமை தள்ளி வைக்கவும்

நஜீப்

சில தினங்களுக்கு முன்னர் கல்முனையில் சஜித் அணியினர் கூட்டம் ஒன்று  நடந்திருக்கின்றது. அதில் கொழும்பில் இருந்து பல தலைவர்கள் வந்து பங்கு பற்றி இருக்கின்றார்கள்.

கூட்டத்தில் பேசிய பிரதேச  அரசியல்வாதிகள் அங்கு வித்தியாசமான ஒரு கோரிக்கையை  தலைவர்களிடத்தில் முன்வைத்திருக்கின்றார்கள்.

நீங்கள் ஹக்கீம் அணியுடன் கூட்டணி போட்டால் நாம் ஜேவிப்பிக்கு பல்டியடித்து விடுவேம் என்று தலைவர்கள் முகத்திற்கே அங்கு சொல்லி இருக்கின்றார்கள்.

வேடிக்கை என்னவென்றால் மு.காவை தீன்டாதவர்களாக பண்ணப் பேசும் பலர் மு.காவில் அரசியல் செய்தவர்கள் என்பதுதான் வேடிக்கை.

இதிலிருந்து இவர்கள் எந்தளவுக்கு கொள்கை ரீதியில் அரசியல் செய்கின்றார்கள் என்பதனைப் புரிந்து கொள்ள முடியும். முஸ்லிம்களின் மொன்டசூரி அரசியலுக்கு இது நல்ல உதாரணம்.

தேசிய அரசியல் என்று வருகின்றபோது இந்த குழந்தைத்தன அரசியல் கோரிக்கை செல்லாக் காசகிவிடும். இவர்கள் பின்னால் போகும் மக்களைப் பற்றித்தான் யோசிக்க வேண்டி இருக்கின்றது.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 20.02.2022

Previous Story

 'இஸ்லாத்தில் ஹிஜாப் அவசியமான ஒன்று இல்லை' - கர்நாடக அரசு வாதம்

Next Story

அமைச்சர் வீட்டு மின் கட்டணம் 1 கோடி 20 லட்சம் ரூபா - மின்சார சபை