நஜீப்
நன்றி 22.11.2026 ஞாயிறு தினக்குரல்

ஒரு காலத்தில் செல்வாக்குடன் இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழிந்து விட்டது என்பதனை சொல்லித்தான் ஆக வேண்டும். அதிக வாக்குப் பலத்துடன் வெற்றி பெற்றாலும் சந்திரிக்க எனது முன்னேற்றத்தை தடுத்துவிட்டார்.
தனக்கு என்னதான் ஜேவிபி.யுடன் முரண்பாடுகள் இருந்தாலும் அந்தக் கட்சியின் கட்டுக்கோப்பையும் உறுதியான நிலைப்பாடுகளையும் நான் மதிக்கின்றேன்-பராட்டுகின்றேன்.
தனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் தான் சுதந்திரக் கட்சியை ஜேவிபியைப் போல கட்டுக் கோப்புடன் மாற்றி அமைத்து சுதந்திர கட்சியை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வருவதுதான் எனது பிரதான இலக்கு.
இப்படி பகிரங்கமாக ஒரு ஊடகச் சந்திப்பில் கருத்துச் சொல்லி இருக்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேக்கர. தினமும் நடாளுமன்றத்தில் ஆளும் தரப்புடன் முட்டி மோதிக்கொண்டிருப்பவர்தான் இந்த தயாசிரி.
எமது கட்சிகளில் திறமையான இளம் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சாடுகின்றார்.





