ஸ்கெட்ச் வெனிசுலாவுக்கு இல்லை.!சீனாவுக்குதான்!!

வெனிசுலாவை அமெரிக்கா புரட்டி போட்டிருக்கும் நிலையில், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது சீனாதான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலாவின் தற்போதைய நிலைமையால் சீனா சுமார் ரூ.45 லட்சம் கோடியை இழக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெனிசுலாவில் ஏழரையை டிரம்ப் கூட்டியிருப்பது அங்கிருக்கும் எண்ணெய் வளங்களை கட்டுக்குள் கொண்டுவரத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த திட்டத்தில் இன்னொரு பிளானை டிரம்ப் வைத்திருக்கிறார்.

What the US capture of Maduro means for China’s interests in Venezuela and beyond

வெனிசுலாவில் இல்லாத வளங்களே கிடையாது. பெட்ரோல், டீசலுக்கு தேவையான கச்சா எண்ணெய், வைரம், இரும்புத் தாது, பாக்சைட், அரிய மண் கனிமங்கள், கோல்டன், நிக்கல், தாமிரம், துத்தநாகம், தகரம், டங்ஸ்டன் மற்றும் டைட்டானியம் போன்றவை கொட்டி கிடக்கின்றன.

இதை சரியான திசையில் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். இது ஒன்றுதான் வெனிசுலாவுக்கு இருந்த சவால். காசு வேண்டும் என்பதற்காக, அமெரிக்காவையோ, இதர ஐரோப்பிய நாடுகளையோ உள்ளே அனுமதிக்க முடியாது.

எரிபொருள் தேவை ஏனெனில், வெனிசுலா என்பது அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நாடுகளில் ஒன்று. காசுக்காக, அமெரிக்காவை உள்ளே விட்டால், ரொம்ப சீக்கிரமாகவே, அது வெனிசுலாவை அடிமைப்படுத்திவிடும். அதே நேரம் ஐரோப்பிய நாடுகளுடனும் வணிகம் மேற்கொள்வதில் சில பிரச்சனைகள் இருந்தன.

இப்படி இருக்கையில்தான் சீனா என்ட்ரி கொடுத்தது. 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சீனாவின் வளர்ச்சி வேகமெடுத்தது. எனவே நிறைய எரிபொருள் தேவைப்பட்டது.   ஆகும் சீனா-வெனிசுலா உறவு வெனிசுலாவில் கம்யூனிச அரசு இருந்ததால், சீனாவை அது நம்பியது. எனவே இருவரும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வளர முடிவெடுத்தனர்.

கச்சா எண்ணெய் மற்றும் வளங்களை வெனிசுலா கொடுத்தது. பதிலுக்கு சீனா பெரிய அளவில் வெனிசுலாவில் முதலீடு செய்தது. எந்த அளவுக்கு எனில்.. 2016ஆம் ஆண்டில் வெனிசுலா சீனாவிடம் சுமார் 105 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் கடன் பட்டிருக்கும் அளவுக்கு இந்த முதலீடு இருந்தது.

அமெரிக்காவின் வில்லியம் அண்ட் மேரி கல்லூரியில் உள்ள AIDDATA ஆராய்ச்சி ஆய்வகம் இந்த தகவலை உறுதி செய்திருக்கிறது. சீனாவின் முதலீடு கடன் இருந்தாலும் சீனாவை வெனிசுலா நம்பியது.

அதாவது ஜன.3ம் தேதி அதிகாலை 2 மணிக்கு நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர், நிக்கோலஸ் மதுரோ சீனாவின் லத்தீன் அமெரிக்க விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதி கியூ க்வோகியை சந்தித்து பேசியிருந்தார்.

அந்த அளவுக்கு வெனிசுலா நம்பியது. இப்படி இருக்கையில் மதுரோ கைது செய்யப்பட்டிருக்கிறார். மறுபுறம் வெனிசுலாவில் சீனாவால் போடப்பட்ட ரூ.45 லட்சம் கோடி முதலீடு கேள்வி குறியாகியிருக்கிறது.

இதுதான் எண்ணெய் வர்த்தகம்

கடந்த 2008இல், சீன அரசுக்கு சொந்தமான சைனா நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், வெனிசுலாவின் அரசுக்கு சொந்தமான PDVSA உடன் கூட்டு முயற்சியான ‘பெட்ரோசினோவென்ஸா’ எனும் நிறுவனத்தை நிறுவி, அந்நாட்டின் மிகக் கனமான கச்சா எண்ணெய்யை மேம்படுத்தியது.

இந்த கச்சா எண்ணெய் பெரும்பாலும் நேரடியாக சீனாவுக்கு அனுப்பப்பட்டது. வெனிசுலா தினசரி ஏற்றுமதி செய்யும் 900,000 பீப்பாய் எண்ணெயில் 800,000 பீப்பாய்கள் சீனாவுக்குச் சென்றன. இதனால், வெனிசுலாவின் கிட்டத்தட்ட 90% எண்ணெய் சீனாவுக்கு விற்கப்பட்டது.

சீன நிறுவனங்கள் இதற்கு ஈடாக, வெனிசுலாவின் சுரங்கத்துறை, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பில்லியன் டாலர்களை முதலீடு செய்ததுடன், உதவிகள் மற்றும் கடன்களையும் வழங்கியது சீனா. வெனிசுலாவின் தொலைத்தொடர்புத் துறையில் சீன நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

ஹுவாங் டெக்னாலஜீஸ் 2004ஆம் ஆண்டிலேயே வெனிசுலா அரசுடன் நாட்டின் ஃபைபர் ஆப்டிக் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தனது முதல் பெரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

இந்த உள்கட்டமைப்பு வெனிசுலாவின் 4G நெட்வொர்க்குக்கு மிக முக்கியமானது. அரிய மண் கனிமங்கள் அதேபோல ZTE எனும் சீனாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், வெனிசுலா மக்களுக்கு அரசு மானியங்களை அணுக உதவும் ‘ஹோம்லேண்ட் கார்டு’ என்ற தேசிய அடையாள அட்டை அமைப்பை உருவாக்கியது.

சீன நிறுவனங்கள் வெனிசுலாவின் அரசுக்கு சொந்தமான உலோக நிறுவனமான கார்ப்போரேஷன் வெனிசுலானா டி குயானா மூலம் இரும்புத் தாது, பாக்சைட், தங்கம் மற்றும் அரிய மண் கனிமங்கள் திட்டங்களிலும் முதலீடு செய்தன.

சிக்கலில் சீனா

இப்படி இஷ்டத்திற்கு சீனா முதலீடு செய்த நிலையில், 2017இல் அமெரிக்கா வெனிசுலா மீது கடுமையான தடைகளை விதித்தது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால், சீனாவுக்குத் திருப்பிச் செலுத்தும் கடன் சரியாக செலுத்த முடியாமல் வெனிசுலா பாதிக்கப்பட்டது.

கடன் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி வந்த நிலையில், மதுரோ அமெரிக்காவால் கடத்தப்பட்டால். எனவே வெனிசுலாவுடனான சீனாவின் வர்த்தகத்தில் தற்போது வானளவு ஓட்டை விழுந்திருக்கிறது.

ஆக அமெரிக்காவின் நடவடிக்கையால் பெரிய பாதிப்பு வெனிசுலாவுக்கு இல்லை, சீனாவுக்குதான் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Previous Story

இஸ்ரேலை தாக்கப்போகும் ஈரான்!

Next Story

ටියුෂන් ගුරා බඩී නෙට් එක කලින්ම දැකලා . ලැජ්ජයි!කණගාටුයි!නින්දිතයි