ஷேக் ஹசீனா கட்சி தலைவர் மேகாலயா எல்லையில் பிணமாக மீட்பு

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சியான அவாமிக் லீக் கட்சி முக்கிய தலைவர் இந்திய- மேகாலாய சர்வதேச எல்லையில் பிணமாக மீட்கப்பட்டார். வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
Latest Tamil News

இதன் காரணமாக அந்நாட்டு பிரதமரும், அவாமி லீக் கட்சி தலைவருமான ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

இன்னும் இயல்பு நிலை திரும்பாத வங்கதேசம்; பத்திரிகையாளர் மரணத்தால் தொடரும் பதற்றம்!

இந்நிலையில் இந்திய மேகாலயா சர்வதேச எல்லையின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் என்ற பகுதியில் டோனா போஹி என்ற கிராமப்பகுதியில் கடந்த 26-ம் தேதியன்று வங்கதேச பாஸ்போர்டுடன் உடலில் காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

போலீசார் அவரை மீட்பு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் பிணமாக கிடந்தவர் வங்கதேச அவாமிக் லீக் கட்சியைச் சேர்ந்த இஷாக் அலிகான் பன்னா என்பது தெரியவந்தது. இவர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

Previous Story

மூணே மூணு நிமிஷ திருமணம்!

Next Story

ரங்கேக்கு என்னதான் நடந்தது!