விலங்கிடப்பட்ட ராஜாக்கள்!

-நஜீப்-

சில நாட்களுக்கு முன்னர் எனக்கு அப்படியும் நடந்து கொள்ளத் தெரியும் என்னை சீண்ட வேண்டாம் என்று தொனியில் நமது ஜனாதிபதி பேசி இருந்தது நினைவில் இருக்கலாம். அவர் நான் ஒரு இராணு அதிகாரி எனக்கு அந்த பாணியிலும் நடந்து கொள்ளத் தெரியும் என்பதுதான் அவர் சொல்ல வந்த செய்தி. ஆனால் நம்மைப் பொறுத்த வரை அவை எல்லாம் வெறும் கற்பனை எண்ணங்கள் மட்டுமே என்பது எமது வாதம்.

இன்று ராஜாக்கள் கையும் காலும் விலங்கிடப்பட்ட நிலையில்தான் அதிகாரத்தில் இருக்கின்றார்கள். சர்வதேச விசாரணைகள் போர்க் குற்றச் செயல்கள், ரது பஸ்வெல மற்றும் சிறைச்சாலை படுகொலைகள் என்ற கத்திகள் தலைக்கு மேல் தொங்குகின்றது. ஐஎம்எப் கடன் பெருவதாக இருந்தால் துப்பாக்கி சத்தம் கேட்கக் கூடாது!

நாடாளுமன்றத்தில் அவசரகாலத்துக்கு பெருபான்மை ஆதரவு எல்லாமே சங்கிலி பிணைப்புக்களாக இருக்கின்றன. இதனால்தான் போராட்டக்காரர்கள் தெருவில் சுதந்திரமாக நிற்க முடிகின்றது.

நன்றி: ஞாயிறு தினக்குரல் 10.04.2022

Previous Story

ஜனாதிபதி இராஜினாமா செய்வதுதான் ஒரே வழி - ரிஷாட் பதியுதீன்

Next Story

மத்திய வங்கி ஆளுநர் IMF பிரதி நிதிகளுடன் பேச்சு