விமானம் தீப்பிடிக்க…!

திடீர் அலர்ட்டால் இறக்கையில்

இருந்து குதித்த பயணிகள்..

ஸ்பெயினில் புறப்பட தயாராக இருந்த போயிங் விமானத்தின் திடீரென்று தீ விபத்துக்கான அலர்ட் கொடுக்கப்பட்டதால் பயந்துபோன பயணிகள் அவசர வழியின் வழியாக விமானத்தின் இறக்கையில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் 18 பேர் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஸ்பெயினில் பால்மா டி மல்லோர்கா எனும் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ரியானேர் போயிங் 737 ரக விமானம் இங்கிலாந்தின் மான்செஸ்டருக்கு புறப்பட தயாராகி இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் தங்களின் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.

விமான நிலையத்தில் இருந்து விமானம் சற்று நேரத்தில் புறப்பட தயாராகி கொண்டிருந்தது. இந்த வேளையில் திடீரென்று தீ தொடர்பான எச்சரிக்கை வழங்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். உடனடியாக விமான பயணிகள் அவசர கதவின் வழியாக விமானத்தின் வெளியேறி விமானத்தின் இறக்கையில் மிதித்து கீழே குதித்தனர்.

பல பயணிகள் பதற்றமடைந்து அவசரஅவசரமாக விமானத்தின் இறக்கையில் இருந்து கீழே குதித்தனர். இதனால் காயமடைந்தனர். மொத்தம் 18 பயணிகள் வரை காயமடைந்தனர்.  தீவிர விசாரணை காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் உடனடியாக அவசர மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.

அப்போது தீ ஆபத்து எதுவும் இல்லாதது உறுதி செய்யப்பட்டது. தீ குறித்து அலர்ட் செய்யும் கருவியில் இருந்து தவறுதலாக எச்சரிக்கை வந்தது தெரியவந்தது. இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர். தீ தொடர்பான எச்சரிக்கையால் பயந்துபோன பயணிகள் அவசரஅவசரமாக விமானத்தில் இருந்து கீழே குதித்ததை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.  முன்னதாக கடந்த வாரம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது இன்ஜினில் திடீரென்று தீப்பிடித்தது.

153 பயணிகள், 6 பணியாளர்களுடன் சென்ற அந்த விமானம் உடனடியாக லாஸ் வேகாஸில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

Previous Story

ரஷ்யா கொலவெறி : உக்ரைன் முழுவதும் தாக்கும்!

Next Story

ශිරන්ති රාජපක්ෂ සගවා සිටි කෝටි ගණනක දේපල මෙන්න