விமலுக்கு எதிராக வழக்கு!

-நஜீப்-

விமல் வீரவன்ச அண்மையில் ‘ஒன்பது மறைக்கப்பட்ட கதைகள்’ என்ற நூலொன்றை வெளியிட்டு அதில் அரசுக்கு எதிரான சதி செய்தவார்கள் என்று அன்று பதவியில் இருந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயரையும் பகிரங்கமாகக் குறிப்பிட்டு அது பற்றிப் பேசி வந்தார்.

மேலும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா மற்றும் அமெரிக்காவையும் அவர் சதிகாரர்களுக்கு உதவியவர்கள் என்று குற்றம் சாட்டி இருக்கின்றார். இதனால் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நஸ்டஈடு வழங்காவிட்டால் விமலுக்கு எதிராக நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் சவேந்திர சில்வா சட்டத்தரணிகள் மூலம் விமலுக்கு அனுப்பி வைத்த  கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

அவர் கேட்கின்ற தொகையைக் கொடுத்து விமல் சமாதானம் செய்து கொள்ளப் போகின்றாரா அல்லது நீதிமன்றில் போய் அவர்கள் சதிகாரர்கள்தான் என்று உறுதி செய்யப்  போகின்றாரா என்பதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டாக்டர் சாபி விவகாரத்திலும் சிங்களப் பெண்களை மலடாக்கும் கதையிலும் தலையை நீட்டி இந்த வீரவன்ச மூக்குடைபட்டிருக்கின்றார் என்பதும் தெரிந்ததே.

நன்றி: 04.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

காசு சம்பாதிக்க ரஜினி!

Next Story

"ஒரே மரண ஓலமாக இருந்தது"  நடந்ததை விவரிக்கும் தமிழக பயணிகள்