விண்வெளி கட்டுமானம்: சீனாபு குழு பயணம்

விண்வெளியில் அமைத்து வரும் விண்வெளி மைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, மூன்று வீரர்களை சீனா அனுப்புகிறது. இவர்கள் இன்று பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
விண்வெளி ஆய்வுக்காக விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் முயற்சியில் பல நாடுகள் இணைந்து இந்த மையத்தை அமைத்து உள்ளன.
இதற்கு போட்டியாக, விண்வெளியில் தனியாக விண்வெளி மையத்தை சீனா அமைத்து வருகிறது. 2021 ஏப்ரலில் இதற்கான பணிகள் துவங்கின.
மொத்தம், 11 முறை விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள் சீன விண்வெளி மையத்தை நிறுவுவதற்கு சீனா திட்டமிட்டு உள்ளது. அதன்படி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, மூன்று வீரர்கள் விண்வெளிக்கு இன்று பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

மொத்தம், நான்கு முறை மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. அதில், இது மூன்றாவது பயணம். தஜூசே ஆகிய விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இவர்கள் அங்கு ஆறு மாதங்கள் தங்கியிருந்து கட்டுமானப் பணிகளை கவனிக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து, டிசம்பரில் மற்றொரு குழு செல்ல உள்ளது.
விண்வெளி மையத்துக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றிச் செல்ல ஆறு ராக்கெட்கள் பயணித்துள்ளன.
Previous Story

ரஷ்ய-இலங்கை   ராஜதந்திர சிக்கல்

Next Story

வங்கத்தில்  சேமிப்பு கிடங்கில் தீ : 52 பேர் பலி, 328 காயம்