நஜீப்
நன்றி: 24.05.2026 ஞாயிறு தினக்குரல்

தமிழக வரலாற்றில் முதல் கூட்டணி அமைச்சரவை இது. விஜய் அரசில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், அகில இந்திய முஸ்லிம் லீக், தரப்புகளுக்கு அமைச்சு. திருமாவலவனையும் உள்வாங்கி அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவும் திட்டமும் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
அதே நேரம் இரு கம்யூனிட்டுக்கள் கொள்கை அளவில் மட்டும் ஆதரவு. அமைச்சுக்களை ஏற்கமாட்டார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. அதிமுக.வில் இருந்து அரசுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை உள்வாங்கினால் லடாய் என்பதால் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்குவதில் சிக்கல் என்றும் தெரிகின்றது.
இதற்கிடையில் திமுக. தலைவர் அங்கிகாரத்துடன்தான் நாம் அரசுக்கு ஆதரவு என்றும் இந்தக் கட்சிகள் பகிரங்கமாக சொல்லி இருந்த நிலையில்தான் இவர்கள் விஜய் அரசில் அமைச்சுக்களை ஏற்றிருப்பது குறிப்படத் தக்கது.
மொத்த அமைச்சர்கள் எண்ணிக்கை 35. முதலமைச்சரும் இதில் அடக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.





