வாராந்த அரசியல் 07.07.2024

-நஜீப்-

ஆளும் தரப்பு வேட்பாளர்!

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முக்கோணப் போட்டி என்று நாம் நெடுநாளாகச் சொல்லி வருகின்றோம். ஐமச. வேட்பாளர் சஜித் தேமச. வேட்பாளர் அணுர. ஆளும் தரப்பு வேட்பாளர் தொடர்ப்பில் ஒரு முடிவு இதுவரை இல்லாவிட்டாலும் தம்மிக்க பெரேரா அல்லது ரணில்.

ரணில் பொது வேட்பாளராக வர எதிர்பார்க்கின்றார். ஆனால் அதற்கு மொட்டுக் கட்சியில் வாய்புக் குறைவு. தனிப்பட்ட ரீதியில் மொட்டுக் கட்சியில் பலர் ரணிலுடன் மேடைகளில் கூவித்திரிந்தாலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடையாது. அதனால்தான் மாத்தரை கூட்டத்துக்கு கொழும்பிலிருந்து ஆட்களை இறைக்குமதி செய்து வந்து அவர்கள் மூக்குடைபட்டார்கள்.

இதனால் அவர்கள் எதிர்வரும் நாட்களில் ரணிலுக்கு பிரச்சாரக் கூட்டம் போடுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும். கடைசி நேரத்தில் ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக்கி பிரதமராக தம்மிகவுக்கு ராஜபக்ஸாக்கள் வாய்ப்புக் கொடுக்கவும் இடமிருக்கின்றது. அல்லது தம்மியை ஜனாதிபதி வேட்பாளராக்கி நாமலை பிரதமராக அறிமுகம் செய்யவும் வாய்ப்பு உண்டு.

ஐயாவை வைத்து பிழைத்தோர்!

ஐயா சம்பந்தர் ஒரு மூத்த அரசியல் தலைவர். அதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. மரணத்தின் பின்னர் பொதுவாக ஒரு மனிதனின் துதி பாடுவவதுதான் சம்பிரதாயம். ஆனால் ஐயாவின் கடைசிக் காலத்தில் அவரை பலர் ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடாத்தி இருக்கின்றார்கள் என்றுதான் நாம் கருதுகின்றோம்.

தெற்கு அரசியல் தலைவர்கள் அவரை பாவித்து தமிழ் மக்களை ஏமாற்றி இருக்கின்றார்கள். அதில் ஜனாதிபதி ரணில் முக்கியமானவர். இவரது பேச்சை கேட்டு அவர் தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளும் ஏறாலம். அதே போன்று கட்சிக்குள் அவரது வயது இயலாமையை வைத்து சுமந்திரன் நிறையவே காய் நகர்த்தி இருக்கின்றார்.

ஒரு கட்டத்தில் பதவியை விட்டு ஓடிப்போ என்றெல்லாம் அவருக்குக் கூறப்பட்டிருக்கின்றது. அவரது இழப்பு தமிழ் மக்களுக்கு துயராக இருந்தாலும் மேற்சொன்ன தரப்புக்களுக்கு மிகப் பெரும் இழப்பாக இருக்கும்.

நாடுபூராவும் ரணில் செயலகம்!

நாடுபூராவிலும் உள்ள தேர்தல் தொகுதிகளை வளையங்களாகப் பிரித்து அவற்றுக்கு ஐதேக. அமைப்பாளர்களை நியமித்திருக்கின்றது. சராசரியாக ஒரு தொகுதிக்கு ஏழு எட்டு அமைப்பாளர்கள் என்ற வகையில் இந்த நியமனங்கள்.

வருகின்ற வெள்ளிக் கிழமை க்கு (12.07.2024ம் திகதி) முன்னர் இந்த அமைப்பாளர்கள் தமது வளையத்துக்கான செயலகங்களை நாடுபூராவிலும் நிறுவி ஆக வேண்டும் என்று கட்டளை. இப்படியாக எட்டு நூறு வரையிலான அமைப்பாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் அண்மையில் காலி முகத்திடல் போராட்டத்தில் என்னை காப்பற்றுங்கள் புகழ் (ஐயோ மாவ பேராகன்ன…) கோஷம் போட்ட மஹிந்த கஹந்தகமகேவுக்கும் ஐதேக.வில் அமைபாளர் பதவி.

அவர் மிகப் பெரிய மஹிந்த விசிரியாக இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த செயலகங்களை வைத்து ரணிலின் தேர்தல் செயல்பாடுகளை முன்னெடுக்க ஐதேக. எதிர்பார்க்கின்றது. ஆனால் ரணிலே தன்னை பொது வேட்பாளர் என்று கூறி வருகின்றார்.

ஹிருணிக்கு சிறு தண்டனையா!

ஆள் கடத்தல் தொடர்பில் ஹிருணிக்காவுக்கு ஒரு மென்மையான தீர்ப்பைதான் நீதி மன்றம் வழங்கி இருக்கின்றது. அவருக்கு மிகவும் வயது குறைந்த மூன்று குழந்தைகள் இருக்கின்றார்கள் என அவர் தரப்பு சட்டத்தரணி சுட்டிக் காட்டிய போது நீதி மன்றம் இதனைச் சொல்லி இருக்கின்றது. 69 வருடங்கள் வரை உள்ள அனுப்பக் கூடிய குற்றம் இது.

குற்றம் சாட்டப்பட்ட அனைத்து அதாவது 18 குற்றங்களுக்கும் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் ஒருமித்த தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. தலா ஒவ்வொரு குற்றத்துக்கும் 20000 ரூபா என செலுத்த வேண்டும். அதனை செலுத்தத் தவறினால் ஒரு குற்றத்துக்கு ஆறு மாதங்கள் என்று சிறை செல்ல வேண்டி வரும். அதாவது 9 வருடங்கள்.

அவரது குழந்தைகளைக் காட்டி தண்டனையில் இருந்து விடுவிக்க சட்டத்தில் இடம் கிடையாது. இது போன்று எத்தைனiயோ சிறுபிள்ளைகளை உடைய தாய்மார் தாம் செய்த குற்றத்துக்காக சிறையில் இருக்கின்றார்கள். மேலும் இவருக்கு தீர்ப்பை மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இருக்கின்றது. அதனால் இன்னும் சில நாட்களில் அவர் வெளியில் வந்து விடுவார்.

என்பிபி.க்கு எங்கிருந்து காசு!

ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் ரங்கே பண்டார ரணிலுக்கு இன்னும் அதிகாரத்தில் இருக்க இடம் கொடுக்க வேண்டும். அதற்கான பிரேரனை நாடாளுமன்றத்தில் விரைவாக வருகின்றது என்று கூறி மூக்குடைபட்டவர் இப்போது என்பிபி.க்கு செலவு செய்ய எங்கிருந்து பணம் வருகின்றது.

இதனை பியூமி ஹன்சமாலி காசு தேடும் பாணியில் ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருக்கின்றார். அத்துடன் அவர்களின் ஆதரவாலர்கள் கட்சிக்கு கொடுக்கின்ற பணத்தை தமது தனிப்பட்ட சுகபோக வாழ்க்கைக்கு செலவு செய்து வருகின்றார்கள். என்றும் குற்றம் சாட்டி வருகின்றார்கள்.

மத்திய வங்கி கொள்ளை சீனிக் கொள்ளை எண்ணைக் கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்ற போது அணுராவுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் தேட நடவடிக்கை எடுக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.

 

Previous Story

மலேசிய போட்டியில் உடதலவின்ன ஸொஹா சாதனை

Next Story

ஜாமியுல் அஸ்ஹர் குருளை சாரணர்