வாராந்த அரசியல் 03.09.2023

-நஜீப்-

1

மீண்டும் கோத்தா அரசியலுக்கு!

இந்த நாட்டில் மிகப் பெரிய மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகி இருண்டே   வருடங்களில் அந்தப் பதவியைக் கைவிட்டு ஓடியவரும் ஜனாதிபதி கோட்டா. மீண்டும் மனிதன் அரசியலுக்கு வர இருப்பது பற்றிய பேச்சுவார்த்தை ஒன்று தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.

அதன் படி ரணில் ஜனாதிபதி கோத்தா பிரதமர் என்றும் கதைகள். கோத்தா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருடைய செயலாளராக இருந்த  சுவிஸ்வர இது தொடர்பான நகர்வுகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிகின்றது. தற்போதும் கூட கோத்தாவின் செயலாளராக இருக்கின்ற இந்த சுவிஸ்வர தற்போது தாய்லாந்துக்குப் போய் ஒரு வாரத்துக்கு பௌத்த துரவரம் பூண்டிருப்பதாகவும் மற்றுமொரு தகவல் தெரிகின்றன.

அவருடைய சகோதரர் ஒருவர்தான் இன்று அங்கு தூதுவராகவும் இருக்கின்றார். அதே போன்று இதே சுவிஸ்வர ரணிலை ஜனாதிபதி நோக்குடன் நிமல் லன்சா முன்னெடுக்கின்ற அணியின் செயலகத்திலும் இவர் பகலுக்குப் பின்னர் கடமையாற்றி வருகின்றார்.

இவர் நிமல் லன்சா அணியுடன் இணைந்து செயலாற்றுவது கூட கோத்தா ஏற்பாட்டின்படிதான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் மொட்டுக் கட்சியில் இருக்கின்ற சிலர் விவரம் புரியாமல் அவரை விமர்சித்து வருகின்றார்கள்.

2

நீதிக்கு ஜனாதிபதி ரணில் ஆப்பு!

தென்னை அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்றில் உரையாற்றும் போது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்டால் அது தொடர்பாக உயர் நீதி மன்றம் கேள்வி கேட்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி.

இது தொடர்பான சிரேஸ்ட நீதிபதிகள் வருகின்ற செப்தெம்பர் 4ம் திகதி கொழும்பு ‘பதனம்’ நிறுவனத்தில் ஒரு பகிரங்க கலந்துரையாடளைச் நடாத்த ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள். ஜனாதிபதியின் கருத்துக்குச் சமாந்திரமாக சபாநாயகரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.

அவர்களது இந்தக் கருத்து நாட்டில் நீதித்துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற மிகப் பெரிய அச்சுருதத்லாக அமைய இருக்கின்றது. ஜனாதிபதி சபாநாயகர் ஆகியோரின் இந்தக் கருத்து நாட்டில் தேர்தல்களைத் நடத்தாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு முயற்சி என்றும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள் அவர்கள்.

இது தொடர்பாக நடந்த ஊடகச் சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணிகள் பலர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

3

அணுராதான் ஜேவிபி வேட்பாளர்!

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் களத்துக்கு வருகின்ற தனது வேட்பாளர் தொடர்பில் முந்திக் கொண்டு அறிவித்தது ஐக்கிய மக்கள் சக்தி. அவர்கள் சஜித்தை தமது வேட்பாளராக அறிவித்திருந்தனர். இதற்குக் காரணம் செல்வாக்கான அணியிகளில் இருந்து சிலர் உள்ளே நுழைந்து தமது அணி வேட்ப்பாளர் தொடர்ப்பில் மறுதல்களைச் செய்து விடக்கூடும் என்ற எண்ணத்தில்தான் இது நடந்திருக்க வேண்டும் என்பது நமது கருத்து. தற்போதய ஜனாதிபதி தன்னை ஒரு வேட்பாளர் என்று அறிவித்தாலும் அவருக்கு ஆளும் தரப்பில் வாய்ப்பு இல்லை என்று மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்கள். கடந்த வாரம் தனியார் தொலைக் காட்சி ஒன்றில் நேரடியாக நடந்த ஒரு கலந்துறையாடலில் ஜேவிபி தலைவர் தன்னைக் கட்சியின் செயற்குழு ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருக்கின்றது என்று அவரே நேரடியாக அறிவித்திருக்கின்றார். சிலர் ஹரினிதான் ஜேவிபி. வேட்பாளர் என்று பரப்புரைகளைச் செய்து கொண்டிருந்த பின்னணியில்தான் இந்த கருத்தை அணுரகுமார நேரடியாக அறிவித்து அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார்.

4

திசை மாறுகின்ற கதைகள்!

ஈஸ்டர் மனிதப் படுகொலையைச் செய்தவர்கள் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்த மனித வேட்டைக்காரர்கள். இதனைச் சுட்டிக் காட்டுவதில் நமக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. அதே போன்று இந்த தாக்குதலின் சூத்திரிதாரி சஹ்ரான்? துவக்க காலத்தில் முஸ்லிம் அமைப்புக்களிடத்தில் தனது ஆதிக்கத்தை மேற்கொள்வதற்கு பல தாக்குதல்களை தனது காத்ததான்குடிப் பிரதேசத்தில் நடத்தி இருந்தான்.

அதுவரை பிர சமூகத்தினர் மீது எந்தத் தாக்குதல்களையும் அவன் நடத்தி இருக்கவில்லை. இதில் அலியார் சந்தியில் நடந்த தாக்குதல் முக்கியமானது. அதனைத் தொடர்ந்து சஹ்ரான் தலைமறைவானன். சஹ்ரான் மனைவி ஹாதியா கொடுத்த வாக்குமூலப்படி  சஹ்ரான் பிற்காலத்தில் இராணுவத்தில் சம்பளத்துக்கும் வேலை பார்த்திருக்கின்றான் என்றும் பதிவாகி இருக்கின்றது. படுகொலையின் பின்னணியில் அரசியல் இருக்கின்றது என்பது பரவலான கதை.

ஆனால் அண்மையில் மோஹான் சமரநாயக்க எழுதிய ‘ஈஸ்டர் படுகொலை’ என்ற புத்தகத்தில் இது ஐஎஸ்.ஐஎஸ் பார்த்த வேலை என்று அவர் தீர்ப்புச் சொல்லி இருக்கின்றார். ஆனால் நடந்த விசாரணைகளில் இது உறுதி செய்யப்படவில்லை. கவனத்தை திசை திருப்பும் ஒரு வேலை இது என தாம் நடாத்திய ஊடகச் சந்திப்பில் தரிந்து உடுவேகெதர மற்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கு முன்னரும் இதே மோகான் பொய்யான தகவல்களை எழுதியதற்ககாக விசாரணைகளை எதிர்நோக்கியவர் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.

5

சம்பந்தனின் வரலாற்றுப் பதிவு!

இலங்கையின் தற்போது ஜனாதிபதி ரணில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு தருவார் என்று நம்பி அதற்கு நாளும் குறித்த தலைவர்தான் ஐயா சம்பந்தன். இதற்கு முன்னரும் பல முறை இப்படியே தமிழ் மக்களுக்கு நம்பிக்கை வழங்கிக் கொண்டிருந்தார் இந்தப் பெரியவர். இதற்கு முன்பு தமிழருக்கு மட்டுமல்ல இந்தியப் பிரதமருக்கே பதின்மூன்று பிளஸ் கொடுக்கின்றேன் என்று ஏமாற்றினார் மஹிந்த. சீ.சீ. இந்தப் பழம் புளிக்கும் என்பது போல இப்போது தமிழர் பிரச்சினைக்கு நீங்கள்தான் எமக்கு ஒரு நல்ல தீர்வு பெற்றுத் தர வேண்டும், பெரியவர் சம்பந்தன் ஐ.நாவுக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ பிராஸ்சிடம் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.

இது வரை பேரின அரசியல் தலைவர்களை நம்பி ஏமாந்தது பற்றி இதுவரையும் பெரியவரோ சட்ட வல்லுனரோ பகிரங்கமாக எதுவுமே பேசவில்லை. தற்போதுவரை தமிழருக்குச் சொந்தமான காணிகள் பறிக்கபட்டு 14000ம் சிங்களவர்களுக்கு அந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப் பட்டிருப்பதனை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட ஏற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

எனவே தமிழருக்கு உரிமைகள் மீட்டுத் தருவதற்குப் பதிலாக அவர்களுக்குச் சொந்தமான காணிகள் சம்பந்தன் காலத்தில்தான் பாரியளவில் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு வருவதும் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் இதனைப் பார்க்க வேண்டும்.

நன்றி: 03.09.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அலி பொங்கோவும் அவுட்!!

Next Story

முக்கிய ஆவணங்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி