வாராந்த அரசியல்

நஜீப்

சாணக்கியருக்கு மர்ஜான் பதில்

கடந்த தொடரின் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ராஜமாணிக்கம் சாணக்கியன் பேசும் போது குறுக்கிட்ட மார்ஜான் பழிலுக்கு சாணக்கியர் அதிரடியாக பதில் கொடுத்து மடக்கியது அனைவரும் பார்த்த காட்சிகளே. இது பற்றி நாம் மர்ஜான் தரப்புக் கருத்துக்களை தொலை பேசியில் கேட்ட போது. அடுத்த தொடரில் இதற்குப் பதில் கொடுப்பதாகவும் அவர்கள் நமக்கு சொல்லி இருந்தார்கள். சொன்ன படி மர்ஜான் பதிலும் கொடுத்திருக்கின்றார். ஆடு நனைவதற்காக ஓநாய் அழ வேண்டிய அவசியம் கிடையாது என்று மர்ஜான் பதில் அமைந்திருந்ததுடன், முஸ்லிம் சமூகத்தினர் இப்படியானவர்கள் விடயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டு என்றும் மார்ஜான் எச்சரித்திருக்கின்றார். தான் இங்கு தனது நாவாண்மையைக காட்ட வரவில்லை. முஸ்லிம் சமூகத்துக்குப் பணியாற்ற வந்திருப்பதாகவும் அவர் அங்கு கூறி இருந்தார். சாண-ஜான் கருத்துக்களை முஸ்லிம் சமூகம்தான் மதிப்பீடு செய்யது பார்க்க வேண்டும்.

 

காலுக்கு குறி தலையில் சூடு

தற்போதய பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேக்கர முன்னாள் ஐதேக. அமைச்சர் சிரில் மெத்தியு பாத்திரம் ஏற்று நடப்பதாக ஜேவிபி. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கூறி இருக்கின்றார். காலை குறிபார்த்து பொலிசார் சுடும் போது அது தலையில் பட்டு விடும் சந்தர்ப்பங்களில் தான் சுட்ட பொலிஸ் தரப்பில்தான் ஆஜராகுவேன் என்று பேசி வருவது அவரது இராணுவ மன நிலையைக் காட்சிப்படுத்துகின்றது. எனவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களின் தலையில் சுடும்படியா வீர சேக்கர கேட்கின்றார் என்று கேள்வி எழுப்புகின்றார் பிமல். மேலும் அரச தொலைக் காட்சிளே இன்று இனவாதத்தை கட்டவிழ்த்து விடுகின்ற வன்முறையாளர்களின் கூடாரமாகி செயலாற்றிக் கொண்டு வருகின்றன என்றும் பிமல் அரசின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்திருக்கின்றார்.

 

குருடனின் சூரிய நமஸ்காரம்
இந்த முறை நாடாளுமன்ற அமர்வில் ரணில் உரையாற்றும் போது தெரிவித்த கருத்துக்களில் அடுத்தவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வது தொடர்பான உபதேசங்களாக அங்கு அமைந்திருந்தது. ஓரிடத்தில் அதிகாரத்தைப் பரவலாக்கி நிருவாகம் செய்வது பற்றி ரணில் பேசினார். அதற்குப் பதில் கொடுத்த அமைச்சர் தினேஷ் குனவர்தன. ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். அன்று நீங்கள் சொல்லுகின்ற அதிகாரங்களை அடுத்தவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துக் காரியம் பார்த்திருந்தால் நீங்கள் இன்று வீட்டுக்குப் போய் இருக்கமாட்டீர்களே என்று ஒரு போடு போட்டார் தினேஷ். தான் வீட்டுக்குப் போனது பற்றி எந்தக் கவலையும் இல்லை என்பது ரணில் பதிலாக இருந்தது. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் நடக்கின்ற தாக்கும்.

வேடிக்கையான தண்டனை
பெண்டோரா பேப்பர்ஸ் விவகாரத்தில் ஒருவர் குற்றவாளியாக நமது நாட்டில் சட்டத்தால் கண்டறியப்பட்டால் அவருக்கு எப்படியான தண்டணைகள் கிடைக்கும் என்று அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று நாம் கருதுகின்றோம். இதற்குப் பதில் தகவல்களை மறைத்து அவற்றை வெளியிடாத குற்றத்துக்கு ஒருவருக்கு வழங்கக் கூடி அதி உச்ச தண்டனை வெரும் ஆயிரம் ரூபாவும் ஒரு வருட சிறைத் தண்டணை மட்டுமே. இதனை சொல்வது நாங்கள் அல்ல செல்வாக்கான சட்டத்தரணி சிரால் லக்திலக்க என்பவர். அவர் 43 வது படையணி என்ற அமைப்பின் சார்பில் அண்மையில் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து நமக்கு இந்தத் தகவலை சொன்னார். இது வரை வெளியான பரடைஸ், பனாமா, பண்டோரா ஆவணங்களில் இலங்கையர் தொன்னூறு பேர் வரை இருப்பதாக நம்பப்படுகின்றது.

விசாரணை பற்றி முஜிபுர்!
தற்போது தனது மகள் மற்றும் மருமகன் முறையான நிருபமா அவர் கணவர் திரு. நடேசனுக்கு எதிரான பண்டாரப் பேப்பர்ஸ் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு ஜனாதிபதி ஜீ.ஆர். ஊழல் மற்றும் மோசடிகள் பற்றிய ஆணைக்குழுக்கு பணிப்புரை வழங்கி இருக்கின்றார். நிருபமா அவர் கணவர் திரு. நடேசன், இவர்களது சொத்துக்கள் ஐரோப்பிய மட்டும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலே இருக்கின்றன. அவற்றை இந்த ஆணைக்குழு எப்படித்தான் விசாரிக்க முடியும். குறைந்தது ஜனாதிபதி வீட்டுப் படிகளிலாவது இந்த விசாரணைக் குழு கால் வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்புகின்றார் சஜித் அணி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான். ஆளும் தரப்பு இது 1994ல் நடந்த சம்பவம் என்று வரவில் வைக்க முனைந்தாலும் ராஜபக்ஸக்களுக்காக 2014 நடேசன் பேரில் தேர்தலுக்காக பணம் சீனாவில் இருந்து வந்திருக்கின்றது என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் போட்டுடைத்திருக்கின்றார். – நன்றி தினக்குரல் வாரமலர்

Previous Story

பண்டோரா பேப்பர்ஸ் கதையை கேளுங்கள்

Next Story

தேர்தல் பற்றிய கதைகளும் சந்தேகங்களும்!