வாக்குறுதி மீறினால் ஆப்பு!

-நஜீப்-

ஐஎம்எப்பிடம் இலங்கை மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்த்திருந்த நிலையில் 2.9 பில்லியன் என்ற தொகைக்;கு சம்மதம் என்பது பெரும் வெற்றி என்று எடுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் அரசு தனது அமைப்புக்கு வாக்குறுதி அளித்தபடி காரியங்கள் நடந்தால் மட்டும் தான் தமது தரப்பு தனது பங்களிப்பை முறையாக  வழங்கும் என் ஒரு போடு போட்டிருக்கின்றார் அதன் மூத்த அதிகாரி பீற்றர் ப்ரூயர்.

கடந்த காலங்களில் நமது ஆட்சியாளர்கள் நாட்டு மக்களை மட்டுமல்ல சர்வதேசத்தையும் வாக்குறுதிகளைக் கொடுத்து அப்பட்டமான ஏமாற்று வேலைகளைச் செய்து தமது காரியத்தை மட்மே செய்து கொள்ளவதில் பெற்றுக் கொண்ட படிப்பினைகளின் படி ஐஎம்எம் இலங்கை விடயத்தில் இந்த கடுமையான முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கின்றது.

ஜனாதிபதிக்கு மொட்டுக் கட்சியினர் இந்த விடயத்தில் எந்தளவு ஒத்துழைப்பைக் கொடுப்பார்கள் என்பதில் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன. அதனால்தான் கட்டம் கட்டமாக தருகின்றோம். உறுதி மொழிகளை காப்பற்றி நடந்து கொள்ளுங்கள் என்ற செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது.

நன்றி: 04.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

"பிஞ்சிலேயே".. 20 பெண்களை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்..

Next Story

புதிய பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ்