வத்திகான் பறந்த பேராயர்! அறிக்கை சமர்ப்பித்தார் கோட்டா!!

கர்தினால் மல்கம் ரஞ்சித் வத்திக்கான் சென்றுள்ள நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள், ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்து அறிக்கைகளையும் நாடாளுமன்றத்துக்கு கையளிக்குமாறு ஏற்கனவே கோரப்பட்டது. எனினும் இதுவரை அவை வழங்கப்படவில்லை. தற்போது இந்த பிரச்சினையை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப்போவதாக கூறி வந்த கர்தினால் மல்கம் ரஞ்சித், நேற்று வத்திகானுக்கு சென்ற பின்னரே ஜனாதிபதியினால் இந்த அறிக்கைகள் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு அடுத்த வாரத்தில் ஆரம்பமாகவிருக்கும் நிலையிலும் அந்த அமர்வை திருப்திப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் தம்மிடம் இருந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளன அதிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அறிக்கைகள் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்படவில்லை என்று அமைச்சர் ரமேஸ் பத்திரன கூறியுள்ளதையும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்

Previous Story

உலகின் அழகிய கட்டடம் துபாயில் கோலாகல திறப்பு

Next Story

யுக்ரேனின்  ரஷ்யா குண்டு மழை