வங்க பிச்சைக்காரர்: 21 மனைவிகள்

   ஒரே அறையில் வாழ்க்கை!

ஷிப்ட் போட்டு பிச்சை.. !

-தகவல் யும்னா என் அம்ரா-

Bangladesh Beggar

இப்போதெல்லாம் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் நடப்பதே கஷ்டம்.. அப்படியிருக்கும்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரருக்கு மட்டும், 21 பெண்கள் தாங்களாகவே முன்வந்து கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அதைவிட ஆச்சரியம்.. அந்த 21 பேருடன் ஒரே வீட்டில் வசித்து அவர், தன்னுடைய 21 மனைவிகளின் பெயர்களை கேட்டால், சொல்ல முடியாமல் தடுமாறுகிறாராம்…!!!

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் மொரு மியா. 35 வயதாகும் இவர் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கு மொத்தம் 21 மனைவிகள் இருப்பதாக அவர் சொன்னதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Bangladesh Beggar

வங்கதேச பிச்சைக்காரர்

இந்த 21 பேரும், மொரு மியாவை விரும்பியிருக்கிறார்கள்.. அவர்களாகவே இவரிடம் வந்து, திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்களாம்.. அவர்களது விருப்பத்தின்பேரில் தான், அவர்களை திருமணம் செய்து கொண்டதாக மொரு மியா சொல்கிறார்.

“என்னிடம் அவர்களுக்கு என்ன பிடிக்கிறது என்றே எனக்குத் தெரியவில்லை.. அதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். பெண்களே என்னிடம் வந்து, “நாம கல்யாணம் செய்துக்கலாமா?” என்று கேட்பார்கள்” என்று மொரு மியா சிரித்தபடியே சொல்கிறார்.

ஒரே ஒரு சின்ன ரூம்

இவராக எந்தப் பெண்ணையும் தேடிப்போய் திருமணம் செய்து கொள்ளவில்லையாம்.. அதுமட்டுமல்ல, கல்யாணம் செய்த பெண்களில், இவரைவிட, வயதில் மூத்த பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம்.

எந்த பெண்ணாவது தன்னை நெருங்கி வந்து, கல்யாணம் செய்துக்கலாமா என்று கேட்டால், அவரை வேண்டாம் என்று சொல்ல மனசு வரவில்லையாம். அப்படிச் சொன்னால் அவர்களை இன்சல்ட் செய்தது போல ஆகிவிடும், என்பதால் அவர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டதாக மொரு மியா சொல்கிறார்..

இத்தனை பேரை திருமணம் செய்திருக்கிறார் என்றால் பெரிய வீடு, வசதியான வாழ்க்கை என்று நினைக்க வேண்டாம்.. மொரு மியாவின் வாழ்க்கை மிகவும் சாதாரணமானது. அவர் ஒரே ஒரு சின்ன ரூம் கொண்ட வீட்டில்தான் வசித்து வருகிறார். அவருடைய முக்கிய வருமானமும் பிச்சை எடுப்பதுதான்.

8 மனைவிகளின் பெயர்கள்

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது.. 21 மனைவிகளும் அவருடனேயே பிச்சை எடுக்கச் செல்வார்களாம்.. ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் செல்வதில்லை.

தினமும் ஒரு மனைவி மொரு மியாவுடன் பிச்சை எடுக்கச் செல்கிறார். அடுத்த நாள் இன்னொரு மனைவி என்று மாறி மாறி ஷிப்ட் போட்டு அவருடன் செல்கிறார்கள்.

சரி, 21 பேரையும் திருமணம் செய்திருக்கிறாரே.. அவர்களுடைய பெயர்களாவது நினைவில் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளார்கள். அங்கேதான் இன்னொரு சுவாரஸ்யம்..

மொரு மியாவால் 21 மனைவிகளின் பெயர்களையும் சொல்ல முடியவில்லை. அவருக்கு நினைவில் இருந்த சில பெயர்களை மட்டுமே சொல்கிறார். அதில் ஷீலா, நர்கிஸ், செலினா, ஆலியா, தாரா, ஜோத்ஸ்னா, ராபியா, பருல் ஆகிய 8 பெயர்கள் உள்ளன. இத்தனை மனைவிகள் இருப்பதால் எல்லோருடைய பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்வதே கஷ்டமாக இருக்கிறதாம்.

புறக்கணிக்கப்பட்ட பெண்கள்

மொரு மியாவின் இந்த பேட்டி தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பரவியதும், நெட்டிசன்களும் ஆளாளுக்கு கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.. சிலர் அவரது வாழ்க்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

சிலர் ஜாலியாக கமெண்ட் செய்துள்ளனர். “இத்தனை பெண்களை கவரும் இவரது திறமையை ஆய்வு செய்ய வேண்டும்” என்று ஒருவர் கிண்டலாக கூறியிருக்கிறார். இன்னொருவர், “இது வங்கதேசத்தில் மட்டுமே சாத்தியம் போல இருக்கிறது” என்றும் கமெண்ட் செய்துள்ளார்.

ஆனால், பெரும்பாலானோர் இந்த விஷயத்தை ஜாலியாக மட்டும் பார்க்கவில்லை. சிலர் இந்த விஷயத்தை வேறு கோணத்தில் பார்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது திருமணம் நடக்காமல் இருந்த பெண்களுக்கு மொரு மியா ஒரு துணையாக இருந்திருக்கலாம், சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட பெண்களை அவர் ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால்தான் மொரு மியாவின் இந்த வித்தியாசமான வாழ்க்கை இப்போது சோஷியல் மீடியாவில் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..

Previous Story

ඥාණසාරගේ සිවුර ගැලවූ හේතුව හෙළිවේ. තලතා අතුකෝරාලටත් කට උත්තර නැහැ

Next Story

தமிழக வெற்றி கழகம் வெற்றி