லிபியாவின்  படகுகள் கவிழ்ந்த  162  பலி !

சட்டவிரோத குடியேறிகளுடன் ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற, இரு படகுகள் லிபியாவின் கடல் பகுதியில் கடந்த வாரம் கவிழ்ந்ததில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சா்வதேச புலம்பெயா் நல அமைப்பின் (IMO) செய்தித் தொடா்பாளா் சஃபா செஹ்லி நேற்று தெரிவித்தார்.

சட்டவிரோத குடியேறிகளுடன் சென்ற படகொன்று கடந்த வெள்ளிக்கிழமை லிபிய கடற்பரப்பில் கவிழ்ந்ததில் குறைந்தது 102 பேர் உயிரிழந்ததாக சஃபா செஹ்லி கூறினார். இந்தப் படகில் இருந்தவர்களில் எட்டு பேர் மீட்கப்பட்டு கரைக்குத் திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து,இரண்டாவது கப்பல் விபத்து கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த விபத்தில் இறந்த 62 புலம்பெயர்ந்தோரின் சடலங்களை லிபிய கடலோரக் காவல்படை மீட்டுள்ளது எனவும் சஃபா செஹ்லி குறிப்பிட்டார்.

அதே நாளில், குறைந்தது 210 புலம்பெயர்ந்தோருடன் சென்றுகொண்டிருந்த படகொன்று கடலோர காவல்படையினரால் இடைமறிக்கப்பட்டு லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கடந்த வாரம் இருவேறு படகு விபத்துக்களில் உயிரிழந்தவா்களையும் சோ்த்து, மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த ஆண்டு இடம்பெற்ற படகு விபத்துகளில் உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Story

பயனுள்ள தகவலை மட்டும் கொடுங்கள்!

Next Story

பிரபாகரன்-சஜித் அறிவு சர்ச்சை!