ரணில்: 22ஆம் திகதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை,பதவிப்பிரமாணம் …!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியின் பின்னர் தான் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள நல்ல நேரம் கணிக்கப்பட்டுள்ளதாக, சமகால ஜனாதிபதியும் வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியின் பிரசார குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்தவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என, ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

பதவிப் பிரமாணம்

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் களத்தில் ரணில் அநுர கடும் போட்டி! பதவிப்பிரமாணம் செய்யப் போவது யார்...! | Ranil Asked Anura To Be Calm Presidential Election

தேர்தல் வெற்றி குறித்து பதற்றமடைய வேண்டாம் என அநுரவுக்கு தகவல் அனுப்புமாறும், அந்த வெற்றி தனக்கானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணிப்பு

தனது வெற்றி குறித்து ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளதாகவும், பதவிப்பிரமாணம் செய்யும் நேரமாக எதிர்வரும் 22ஆம் திகதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, ஜோதிடர்களால் நேரம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் களத்தில் ரணில் அநுர கடும் போட்டி! பதவிப்பிரமாணம் செய்யப் போவது யார்...! | Ranil Asked Anura To Be Calm Presidential Election

தனது பதவிப்பிரமாணத்திற்கு அநுரவும் வருகை தர முடியும். அத்துடன் அநுர தனது பணியை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு: இது ஜனாதிபதி ரணிலின் மற்றுமொரு நகைச்சுவை. இதனைப் போய் எவரும் சீரியசாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. மனிதன் காட்சியிலே இல்லை என்பது நமது கணிப்பு.

Previous Story

அடி கொஞ்சம் பலமா பட்டுடுச்சு; இன்னொரு விவாதம் தேவையில்லை; ஓட்டம் பிடித்தார் டிரம்ப்

Next Story

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல்