ரணில்-ராஜபக்ஸ இழுபறி!

-நஜீப்-

ஜனாதிபதி ரணில் ஜனாதிபத் தேர்தலுக்கு தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த நேரத்தில் பசில் முன்கூட்டி பொதுத் தேர்தல்தான் நடாத்தப்பட வேண்டும் என்று தனது பரப்புரைகளை இப்போது பகிரங்கமாகவே துவங்கி விட்டார். இதுபற்றி ஜனாதிபதியை சந்திக்கப் பசில் மஹிந்த மற்றும் யோசித்த அங்கு போய் இருக்கின்றார்கள்.

அவர்களுடன் யோசித்த சென்றாலும் அவர் அந்தக் கலந்துரையாடலில் பங்கு கொள்ளவில்லை.  சந்திப்பில் ரணில் பிடி கொடுக்காமல் அங்கு காய் நகர்த்தி இருக்கின்றார். இதனால் ராஜபக்ஸாக்கள்  முதலில் பொதுத் தேர்தல் ஜூன் முதல் வாரத்தில் நடாத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ரணில் பதில் வழங்கவில்லை.

இதனால் ராஜபக்ஸாக்கள் தலைமையிலான மொட்டுக் கட்சியினர் இந்தத் தேர்தலை பெற்றுக் கொள்ள மாற்று வழிகளை நாட இருப்பதாகத் தெரிகின்றது. அதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

பொதுத் தேர்தலை முன்கூட்டி வைத்தால் அது அனைவருக்கும் பாதுகாப்பாக  இருக்கும். ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி வைத்தால் அது ஆபத்தாக அமையும் என்பதுதான் பசில் வாதம். சந்திப்பில் ஜேவிபி.யின் ஆசாதாரன செல்வாக்கு பற்றியும் இரு தரப்பினரும் கருத்துப் பறிமாறியதாகவும் ஒரு தகவல்.

நன்றி: 17.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

 கோட்டா எதிர்ப்பு: சாடிய தேரர்

Next Story

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள்: 2024 (கருத்துக் கணிப்பு)